சிறுபான்மையினர் நலத்திட்டங்களை ஆய்வு செய்ய சிறப்புக் குழு

சிறுபான்மையினர் நலத்திட்டங்களை ஆய்வு செய்ய சிறப்புக் குழு
Updated on
1 min read

சென்னை: சிறு​பான்​மை​யினர் நலத்​திட்​டங்​களை ஆய்வு செய்து பணி​களை துரிதப்​படுத்​தும் வகை​யில், தமிழக அரசு சிறப்​புக் குழுவை அமைத்து உத்​தர​விட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக, பிற்​படுத்​தப்​பட்​டோர், மிக​வும் பிற்​படுத்​தப்​பட்​டோர் மற்​றும் சிறு​பான்​மை​யினர் நலத்​துறை செயலர் ஏ.சர​வணவேல்​ராஜ் வெளி​யிட்​டுள்ள அரசாணை​யில் கூறியிருப்பதாவது: சிறு​பான்​மை​யினர் நலத் திட்​டங்​களை மாவட்ட அளவில் ஆய்வு செய்து பணி​களை துரிதப்​படுத்​தும் வகை​யில், திருச்சி கிழக்கு தொகுதி சட்​டப்​பேரவை உறுப்​பினர் த.இனிகோ இருதய​ராஜ், தமிழ்​நாடு வக்பு வாரிய உறுப்​பினர் டாக்​டர் அ.சுபேர்​கான், மாவட்ட வரு​வாய் அலு​வலர் ஆகிய உறுப்​பினர்​களை கொண்ட குழுவை அமைத்து அரசு ஆணை​யிடு​கிறது.

முஸ்​லிம்​கள், கிறிஸ்​தவர்​கள், சீக்​கியர்​கள், புத்த மதத்​தினர், சமணர்​கள், பார்​சிகள் ஆகிய சிறு​பான்​மை​யின மக்​களின் சமூக, பொருளா​தார கல்வி நிலையை மேம்​படுத்த தமிழக அரசு செயல்​படுத்தி வரும் பல்​வேறு நலத்​திட்​டங்​களை சிறப்​புக் குழு மாவட்ட அளவில் ஆய்வு மேற்​கொண்டு அவற்றை விரைவுபடுத்​து​வதற்​கான பணி​களை செய்​யும்.

இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதற்​கிடையே, சிறப்​புக் குழு உறுப்​பினர் நியமனம் தொடர்​பாக சம்​பந்​தப்​பட்ட உறுப்​பினர்​களுக்​கு, நல ஆணை​யர் ஆசியா மரி​யம் தகவல் அனுப்​பி​யுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in