சென்னை கோட்டத்தில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயற்சி: 8 மாதங்களில் 944 பேர் கைது

சென்னை கோட்டத்தில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயற்சி: 8 மாதங்களில் 944 பேர் கைது
Updated on
1 min read

சென்னை: சென்னை ரயில்வே கோட்​டத்​தில், நடப்​பாண்​டில் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 8 மாதங்​களில் ரயில் தண்​ட​வாளத்தை அத்​து​மீறி கடக்க முயன்​றது தொடர்​பாக, 944 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். அவர்​களிடம் இருந்து ரூ.4.45 லட்​சம் அபராதம் வசூலிக்​கப்​பட்​டுள்​ளது. தெற்கு ரயில்​வே​யில் பெரிய கோட்​ட​மாக, சென்னை ரயில்வே கோட்​டம் விளங்​கு​கிறது. தமிழகத்​தின் வடமாவட்​டங்​கள் மற்​றும் தெற்கு ஆந்​திரா வரை ரயில்வே எல்​லை​யாக​வும், மொத்​தம் 697.92 கி.மீ. நீளம் வரை இதன் பாதை​யாக​வும் உள்​ளது.

சென்​னை​யில், கடற்​கரை - தாம்​பரம் - செங்​கல்​பட்​டு, சென்னை சென்ட்​ரல் - அரக்​கோணம் மற்​றும் கும்​மிடிப்​பூண்​டி, கடற்​கரை - வேளச்​சேரி ஆகிய பிர​தான வழித் தடங்​களில், தின​மும் 630-க்​கும் மேற்​பட்ட மின்​சார ரயில்​களின் சேவை​ இயக்​கப்​படு​கின்​றது. இதுத​விர, 150-க்​கும் மேற்​பட்ட விரைவு ரயில்​களும் இயக்​கப்​படு​கின்​றன. ரயில் போக்​கு​வரத்து அதி​கம் உள்ள இவ்​வழித் தடங்​களில், தண்​ட​வாளத்தை கடக்​கும் நபர்​கள் சிலர் அவ்​வப்​போது ரயி​லில் அடிபட்டு இறக்​கும் சம்​பவம் நடை​பெறுகிறது.

ரயில் தண்​ட​வாளத்​தில் அத்​து​மீறி நுழைந்​து, கடக்க முயன்​றது உட்பட சில காரணங்​களால், சென்னை ரயில்வே கோட்​டத்​தில் நடப்​பாண்​டில் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 8 மாதங்​களில் ரயி​லில் அடிப்​பட்டு 228 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். 34 பேர் காயமடைந்​துள்​ளனர். விபத்​தைக் கட்​டுப்​படுத்த, ரயில் தண்​ட​வாளத்தை கடப்​பதை தடுக்க சென்னை ரயில்வே கோட்​டம் தீவிர நடவடிக்கை எடுத்​துள்​ளது. அதன்​படி, ரயில் தண்​ட​வாளத்​தில் அத்துமீறி நுழைவதை தடுக்க, ஆர்​பி.ஃப் போலீ​ஸார் கண்​காணிப்பு அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது.

இதுத​விர, பாது​காப்​பற்ற முறை​யில் பயணம் மேற்​கொள்​பவர்​களை பிடித்து வழக்​குப் பதிந்​து, அபராத​மும் விதிக்​கப்​படு​கிறது. நடப்​பாண்​டில் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை, சென்னை கோட்​டத்​தில் ரயில் தண்​ட​வாளத்​தில் அத்து​மீறி நுழைந்​து, கடக்க முயன்ற 944 பேர் கைது செய்​யப்​பட்​டனர். அவர்​கள் மீது, வழக்கு தொடரப்​பட்​டு, ரூ.4 லட்​சத்து 45 ஆயிரத்து 600 அபராதம் வசூலிக்​கப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்​து, சென்னை ரயில்​லவே கோட்ட அதி​காரி​கள் கூறிய​தாவது: ரயில் தண்​ட​வாளங்​களில் சட்​ட​விரோத​மாக நுழைவது, ரயில் விபத்​துகள் மற்​றும் உயி​ரிழப்​பு​களுக்கு முக்​கியக் காரண​மாக உள்​ளது. இதைத் தடுக்க, தீவிர நடவடிக்கை எடுக்​கப்​படு​கிறது. இந்த ஆண்டு இது​வரை, ரயில் தண்​ட​வாளங்​களுக்கு அரு​கில் உள்ள பள்​ளி​கள், கல்​லூரி​கள் மற்​றும் விபத்து அதி​கம் நிகழும் பகு​தி​களில் 126 விழிப்​புணர்வு நிகழ்ச்​சிகள் நடத்​தப்​பட்​டுள்​ளன.

அனைத்து பயணி​கள் மற்​றும் பொது​மக்​களும் ரயில் தண்​ட​வாளங்​களைக் கடப்​ப​தைத் தவிர்க்க வேண்​டும். ஒரு நொடி கவனக் குறைவு​கூட ஈடு​செய்ய முடி​யாத சோகத்தை ஏற்​படுத்​தக் கூடும். பொது​மக்​கள் தங்​கள் அன்​புக்​குரிய​வர்​களின் பாது​காப்​புக்​காக நடைமேம்​பாலங்​கள், லெவல் கிராசிங்​கு​கள், சுரங்​கப் பாதைகளை மட்​டுமே பயன்​படுத்​த வேண்​டும்​ என அவர்​கள்​ தெரி​வித்​தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in