மேட்​டூர் அணையிலிருந்து 13,000 கனஅடி​ தண்ணீர் வெளியேற்றம்

மேட்​டூர் அணையிலிருந்து 13,000 கனஅடி​ தண்ணீர் வெளியேற்றம்
Updated on
1 min read

மேட்​டூர்: மேட்​டூர் அணையி​லிருந்து டெல்டா பாசனத்​துக்கு நீர் திறப்பு விநாடிக்கு 13,000 கனஅடி​யாக குறைக்​கப்​பட்​டுள்​ளது. மேட்​டூர் அணைக்கு நேற்று முன்​தினம் விநாடிக்கு 8,641 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று 8,342 கனஅடி​யாக குறைந்​தது.

அணையி​லிருந்து காவிரி டெல்டா பாசனத்​துக்கு திறக்​கப்​படும் நீரின் அளவு விநாடிக்கு 15,000 கனஅடியி​லிருந்து 13,000 கனஅடி​யாக குறைக்​கப்​பட்​டது. கால்​வாய் பாசனத்​துக்கு விநாடிக்கு 800 கனஅடி நீர் திறக்​கப்​பட்டு வரு​கிறது.

தண்​ணீர் வரத்​தை​விட நீர் திறப்பு அதி​க​மாக உள்​ள​தால் அணை நீர்​மட்​டம் குறை​யத் தொடங்​கி​யுள்​ளது. அணை நீர்​மட்​டம் 119.18 அடியி​லிருந்து 118.75 அடி​யாக​வும், நீர் இருப்பு 92.16 டிஎம்​சியி​லிருந்து 91.49 டிஎம்​சி​யாக​வும் குறைந்​துள்​ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in