எத்தனை தொகுதிகளில் மநீம போட்டி? - நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் முக்கிய ஆலோசனை

மக்கள் நீதி மய்யத்தின் மண்டல கலந்தாய்வு கூட்டம் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். | படம்: எஸ்.சத்தியசீலன் |
மக்கள் நீதி மய்யத்தின் மண்டல கலந்தாய்வு கூட்டம் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். | படம்: எஸ்.சத்தியசீலன் |
Updated on
1 min read

சென்னை: மக்​கள் நீதி மய்​யம் கட்​சிக்கு பொது​ மக்​களிடம் உள்ள செல்​வாக்​கு, 2026 சட்​டப்​பேரவை தேர்​தலில் எத்​தனை தொகு​தி​களில் போட்​டி​யிடலாம்? என்பன குறித்து கட்சி நிர்​வாகி​களிடம் கமல்​ஹாசன் ஆலோ​சனை நடத்​தி​னார். அடுத்த ஆண்டு நடை​பெறவுள்ள தமிழகம் மற்​றும் புதுச்​சேரி சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​கான பணி​கள் தொடர்​பாக மக்​கள் நீதி மய்​யம் கட்​சி​யின் தலை​வர் கமல்​ ஹாசன், கட்சி நிர்​வாகி​களை செப்​.18 முதல் 21-ம் தேதி வரை மண்டல வாரி​யாகச் சந்​தித்து ஆலோ​சனை நடத்​துகிறார்.

இதற்​காக சென்னை ராஜா அண்​ணா​மலைபுரத்​தில் உள்ள டிஎன் ராஜரத்​தினம் கலை​யரங்​கில் ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது. முதல்​நாள் ஆலோ​சனை கூட்​டம் நேற்று தொடங்​கியது. கமல்​ஹாசன் தலை​மை​யில் நடை​பெற்ற இந்த கூட்​டத்​தில் காலை​யில் சென்னை மண்டல நிர்​வாகி​களும், மாலை​யில் காஞ்​சிபுரம் மண்டல நிர்​வாகி​களும் பங்​கேற்​றனர். அவர்​களு​டன் கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் ஆ.அருணாச்​சலம், துணைத் தலை​வர்​கள் ஏ.ஜி.மவுரி​யா, ஆர்​.தங்​கவேலு உள்​ளிட்ட நிர்​வாகி​களும் பங்கேற்றனர்.

சென்னை மண்டல கலந்​தா லோ​சனைக் கூட்​டத்​தில் கமல்​ஹாசன் பேசும்​போது, “எத்​தனை மொழிகளை வேண்​டு​மா​னாலும் கற்​றுக்​கொள்​ளுங்​கள். ஆனால், தாய்​மொழியை மறந்​து​வி​டாதீர்​கள். உங்​களால் தீர்க்க முடிந்​ததை மட்​டும் வாக்​குறு​தி​யாகக் கொடுங்​கள். என்னை சமூகரீ​தி​யாக அடை​யாளப்​படுத்த சிலர் முயற்சி செய்​கிறார்​கள். நான் எந்த சமூகத்​தைச் சேர்ந்​தவன் என்​பதை நான்​தான் சொல்ல வேண்​டும்.

நான் யார் என்​பது எனது நடவடிக்​கை​களி​லேயே தெரி​யும். என்னை திமுக​வில் சேர்ந்​து​விட்​ட​தாக சிலர் விமர்​சனம் செய்​கின்​றனர். நீதிக்​கட்​சி​யில் இருந்து வந்த கட்​சி​தான் திமுக. நமது கட்​சி​யிலும் நீதி உள்​ளது” என்று கூறி​யுள்​ளார்.

இக்​கூட்​டத்​தில், மக்​கள் நீதி மய்​யத்துக்கு பொது​மக்​களிடம் செல்​வாக்கு எப்​படி இருக்​கிறது? 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் எத்தனை தொகு​தி​களில் போட்​டி​யிடலாம்? என்​பது உள்​ளிட்ட பல்​வேறு விஷ​யங்​கள் தொடர்​பாக கேட்​கப்​பட்​ட​தாக நிர்​வாகி​கள் தெரி​வித்​தனர்.

இன்று (வெள்​ளி) காலை கோவை மண்​டலம், மாலை மதுரை மதுரை மண்​டலம், நாளை காலை நெல்லை மண்டலம், மாலை திருச்சி மண்​டலம், 21-ம் தேதி காலை விழுப்​புரம் மண்​டலம், மாலை சேலம் மண்​டலம் மற்​றும் புதுச்​சேரி என நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in