பனைமரங்களை வெட்ட மாவட்ட ஆட்சியர் அனுமதி கட்டாயம்: அரசாணை வெளியீடு

பனைமரங்களை வெட்ட மாவட்ட ஆட்சியர் அனுமதி கட்டாயம்: அரசாணை வெளியீடு
Updated on
2 min read

சென்னை: பனை மரத்தை வெட்​டும்​போது மாவட்ட ஆட்​சி​யரிடம் அனு​மதி பெறு​வதற்​கான வழி​காட்டு நெறி​முறை​களை தமிழக அரசு வெளி​யிட்​டுள்​ளது.

இதுகுறித்து வேளாண்​துறை வெளி​யிட்ட அரசாணை​ விவரம்: சட்​டப்​பேர​வை​யில் கடந்த 2022-ம் ஆண்டு வேளாண் நிதி​நிலை அறிக்​கையை அமைச்​சர் தாக்​கல் செய்​யும்​போது, ‘‘பனைமரத்தை வேரோடு வெட்டி விற்​க​வும், செங்​கல் சூளை​களுக்கு பயன்​படுத்​தும் செயலைத் தடுக்​க​வும் அரசால் உத்​தரவு பிறப்​பிக்​கப்​படும். தவிர்க்க முடி​யாத சூழ்​நிலை​யில் பனைமரங்​களை வெட்​டு​வதற்​கு, மாவட்ட ஆட்​சி​யர் அனு​மதி கட்​டாய​மாக்​கப்​படும்” என அறி​வித்​தார்.

தொடர்ந்து வெளி​யிடப்​பட்ட அரசாணை​யில், மாவட்ட ஆட்​சி​யர், வரு​வாய் கோட்​டாட்​சி​யர் அல்​லது உதவி மாவட்ட ஆட்​சி​யர், சார் மாவட்ட ஆட்​சி​யர், வேளாண் உதவி இயக்​குநர், காதி கிராமத் தொழில் வாரிய உதவிஇயக்​குநர் ஆகியோ​ருடன் கூடிய குழு அமைக்​கப்​படும். மாவட்ட ஆட்​சி​யர் வேறு உறுப்​பினரை​யும் தேவைக்​கேற்ப குழு​வில் சேர்க்​கலாம் என தெரிவிக்​கப்​பட்​டது.

இதையடுத்​து, தோட்​டக்​கலைத்​துறை இயக்​குநர், மாவட்ட ஆட்​சி​யரிடம் மரம் வெட்​டு​வதற்​கான அனு​ம​தியை பெறு​வதற்கு வழி்​காட்டு நெறி​முறை​களை உரு​வாக்​கு​வதற்​கான கருத்​துருவை அரசுக்கு சமர்ப்​பித்​தார். அதில், தமிழகத்​தில் கடந்த 2020-ம் ஆண்டு கதர்த்​துறை எடுத்த கணக்​கின்​படி, 5 கோடி பனை மரங்​கள் உள்​ளன. இந்த மரங்​களை வாழ்​வா​தா​ர​மாக கொண்டு 3 லட்​சம் விவ​சாய, தொழிலா​ளர் குடும்​பங்​கள் உள்​ளன. பனைப்​பொருட்​கள் ஏற்​றுமதி மூலம் பனைத் தொழில் அந்​நியசெலா​வணி வரு​வாய்க்கு பங்​களிக்​கிறது. இத்​தகைய முக்​கி​யத்​து​வம் வாய்ந்த பனை மரங்கள் குறைந்து வருவதை அரசு கவனத்​தில் கொண்டு பனைமரங்​களின் எண்​ணிக்​கையை அதி​கரிக்க 3 ஆண்​டு​களாக பனை மேம்​பாட்டு இயக்​கத்தை செயல்​படுத்தி வரு​கிறது.

பனைமரத்​தின் முக்​கி​யத்​து​வத்தை கருத்​தில் கொண்டு பனைமரங்​கள் வெட்​டப்​படு​வதை தடுக்க மாவட்ட ஆட்​சி​யர் தலை​மை​யில், மாவட்ட, வட்​டார அளவி​லான கண்​காணிப்​புக் குழுக்​களை அமைக்க வேண்​டும் என்று பரிந்​துரைத்​தார். இந்​தப் பரிந்​துரையை ஏற்ற தமிழக அரசு, மாவட்ட ஆட்​சி​யர் தலை​மை​யில் மாவட்ட அளவில் கண்​காணிப்​புக்​குழு, வட்​டார அளவி​லான கண்​காணிப்​புக் குழு​வும் அமைத்​துள்​ளது. இக்​குழுக்​கள் இதுகுறித்த விழிப்​புணர்வு ஏற்​படுத்​த​வும் அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது.

பனை மரம் தவிர்க்க முடி​யாத சூழலில் வெட்ட நேரிட்​டால், மாவட்ட அளவி​லான குழு​வின் அனு​மதி அவசி​யம். பனை மரம் வெட்ட அனு​மதி வேண்டி தனி​நபர், பொதுத்​துறை நிறு​வனங்​கள், வேளாண் துறை​யின் உழவர் செயலி​யில் விண்​ணப்​பிக்க வேண்​டும். அதன் பின்​னர் சம்​பந்​தப்​பட்ட வட்​டார அலு​வலர்​கள் விண்​ணப்​பத்தை பதி​விறக்​கம் செய்​து, ஆய்வு செய்து பனைமரத்தை வெட்ட வேண்​டியதன் அவசி​யம் குறித்து மாவட்ட அளவி​லான குழு​வுக்கு அறிக்கை அளிக்க வேண்​டும். 3 மாதங்​களுக்கு ஒரு​முறை அல்​லது தேவைக்​கேற்ப மாவட்ட அளவி​லான குழு கூட்​டம் நடத்தி விவா​திக்க வேண்​டும். பனைமரங்​களை வளர்ப்​பதை ஊக்​குவிக்க, ஒரு மரத்தை வெட்​டி​னால் அதற்கு ஈடாக 10 மரக்​கன்​றுகளை நட்​டு​வளர்ப்​பதை உறுதி செய்ய வேண்​டும். மாவட்ட அளவி​லான குழு, மரத்தை வெட்​டு​வதற்​கான முடிவை ஒரு மாதத்​துக்​குள் விண்​ணப்​ப​தா​ரருக்கு தெரிவிக்க வேண்​டும்.

மாவட்ட அளவி​லான குழு​வின் முடிவே இறு​தி​யானது. மனு​தா​ரரும் அனு​மதி பெற்ற பின்​னரே வெட்ட வேண்​டும். வெட்​டும் போது ஆய்வு செய்ய குழு அதி​காரி​களுக்கு அதி​காரம் வழங்​கப்​படும். வெட்​டப்​பட்ட மரத்​தின் பாகங்​களை ஓரிடத்​தில் இருந்து வேறு இடத்​துக்கு எடுத்​துச்​செல்​லும் போது தோட்​டக்​கலை இயக்​குநர் அனு​ம​திக்​ கடிதத்தை காட்ட வேண்​டும். இவ்​​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in