

கருணாநிதி எழுபது ஆண்டுகால இந்திய, தமிழக அரசியலுக்கு வளம் மிக்க சகாப்தத்தை விட்டுச்சென்றுள்ளார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் யெச்சூரி இரங்கல் தெரிவித்துள்ளார்.
கருணாநிதி மறைவு குறித்து சீதாராம் யெச்சூரி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ''எழுபதாண்டுகளாக பரிணமித்துவரும் இந்திய / தமிழக அரசியலுக்கு வளம்மிக்க சகாப்தத்தை விட்டுச் சென்றிருக்கிறார் கலைஞர் கருணாநிதி.
சமூக நீதி, ஏழை, எளியோரின் முன்னேற்றத்திற்கான அரசியல் மற்றும் அறிவுசார் தலைவராக எழுந்தவர் அவர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவரோடு இணைந்து செயல்பட்டுள்ளேன். பகுத்தறிவு, மனிதநேயம் மற்றும் இந்திய பன்முகத்தன்மை குறித்து அவரிடம் கற்றவை ஏராளம். பெரும் வெறுமையை விட்டுச் செல்கிறார். மிகப்பெரும் இழப்பு. இதய அஞ்சலி'' என்று தெரிவித்துள்ளார்.