மாநகராட்சி சார்பில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: பணிகளை ஆய்வு செய்த ஆணையர்

மாநகராட்சி சார்பில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: பணிகளை ஆய்வு செய்த ஆணையர்
Updated on
1 min read

சென்னை: சென்னை மாநக​ராட்சி சார்​பில், வடகிழக்கு பரு​வ​மழை முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக, அனைத்து மண்​டலங்​களி​லும் மேற்​கொள்​ளப்​பட்டு வரும் உபகரணங்​கள் சரி​பார்ப்பு பணி​களை மாநக​ராட்சி ஆணை​யர் ஜெ.குமரகுருபரன் நேற்று நேரில் ஆய்வு செய்​தார்.

இது தொடர்​பாக, சென்னை மாநக​ராட்சி வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பு: சென்னை மாநக​ராட்​சி​யில் வடகிழக்​குப் பரு​வ​மழையை முன் ​னிட்​டு, மழைக் காலத்​தில் மீட்பு மற்​றும் நிவாரண நடவடிக்​கைகளுக்​காக பயன்​படுத்​தப்​பட​வுள்ள ஜேசிபி உள்​ளிட்ட அனைத்து வகை​யான வாக​னங்​கள், இயந்​திரங்​கள், உபகரணங்​கள் ஆகிய​வற்றை சரி​பார்த்து தயார்​படுத்​தும் பணி​கள், அனைத்து மண்​டலங்​களி​லும் நேற்று மேற்​கொள்​ளப்​பட்​டன. இப்​பணி​கள் உரிய பொறுப்பு அலு​வலர்​களின் வாயி​லாக கண்​காணிக்​கப்​பட்​டது.

மோட்டார் பம்புகள்: வடகிழக்​குப் பரு​வ​மழையை முன்​னிட்​டு, மோட்​டார் பம்​பு​களு​டன் கூடிய டிராக்​டர்​கள் ரிப்​பன் மாளிகை வளாகத்​துக்கு வந்​துள்ள நிலை​யில், அவற்றை தயார்​படுத்​தும் பணி​களும் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன. வளசர​வாக்​கம் மண்​டலத்​தில் நடை​பெற்ற சரி​பார்க்​கும் பணி​களை மாநக​ராட்சி ஆணை​யர் ஜெ.குமரகுருபரன் நேற்று நேரில் ஆய்வு செய்​தார்.

வடகிழக்​குப் பரு​வ​மழை​யை முன்​னிட்​டு, தாழ்​வான இடங்​களில் தேங்​கும் மழைநீரை அகற்​றும் பணிக்​காக, மாநக​ராட்​சி​யில் 50 எச்பி திறன் வரையி​லான 594 மோட்​டார் பம்​பு​கள், 192 நீர்​மூழ்கி பம்​பு​கள், 500 டிராக்​டர் பம்​பு​கள், 100 எச்பி திறன் கொண்ட 150 டீசல் பம்​பு​கள் பயன்​படுத்​தப்பட உள்​ளன. மேலும், 2 ஆம்​பிபியன், 3 ஆம்​பிபியன் எஸ்​கவேட்​டர்​கள், பல்​வகை பயன்​பாட்​டுக்​கான 6 ரோபோடிக் எஸ்​கவேட்​டர்​கள் பயன்​படுத்​தப்பட உள்​ளன.

478 வாகனங்கள்: அத்​துடன், 3 மினி ஆம்பிபியன், 7 சூப்​பர் சக்​கர் வாக​னங்​கள், 15 மரக்​கிளை அகற்​றும் சக்​தி​மான் வாக​னங்​கள், கையி​னால் இயக்​கப்​படும் 224 மரக்​கிளை அகற்​றும் இயந்​திரங்​கள், மரக்​கிளை அகற்​றும் 52 டெலஸ்​கோபிக் இயந்​திரங்​கள், கிரேன் பொருத்​தப்​பட்ட 5 வாக​னங்​கள், 7 ஜேசிபி வாக​னங்​கள், 60 பாப்​காட் வாக​னங்​கள், 93 டிப்​பர் லாரி​கள், 1 டெலிஹேண்ட்​லர் வாக​னம் என, மொத்​தம் 478 வாக​னங்​கள் மற்​றும் இயந்​திரங்​களும் பயன்​படுத்​தப்பட உள்​ளன. இவ்​வாறு செய்​திக்​குறிப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in