மாநிலத்துக்குள் மின்சார வர்த்தகம் மேற்கொள்ள ​பசுமை எரிசக்தி கழகத்துக்கு உரிமம் வழங்கல்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

மாநிலத்துக்குள் மின்சார வர்த்தகம் மேற்கொள்ள ​பசுமை எரிசக்தி கழகத்துக்கு உரிமம் வழங்கல்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்
Updated on
1 min read

சென்னை: மாநிலத்​துக்​குள் மின்​சார வர்த்​தகம் மேற்​கொள்ள தமிழ்​நாடு பசுமை எரிசக்தி கழகத்​துக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ள​தாக மின்​வாரிய அதி​காரி​கள் தெரி​வித்​தனர். காற்​று, நீர், சூரிய ஆற்​றல் போன்ற புதுப்​பிக்​கத்​தக்க எரிசக்தி திட்​டங்​களின் வளர்ச்சி மற்​றும் செயல்​படுத்​தலை நெறிப்​படுத்​தும் நோக்​கத்​துடன் தமிழ்​நாடு பசுமை எரிசக்தி கழகம் உருவாக்கப்பட்​டது.

தமிழகத்​தின் மின்​சார உற்​பத்​தி​யில் புதுப்​பிக்​கத்​தக்க எரிசக்​தி​யின் பங்கை 2030-ம் ஆண்​டுக்​குள் 50 சதவீத​மாக உயர்த்​து​வதும், புதுப்​பிக்​கத்​தக்க கொள்​முதல் இலக்கை அடைவதும் பசுமை எரிசக்தி கழகத்​தின் முக்​கிய நோக்​கங்​களில் ஒன்​று.

இந்​நிலை​யில் சூரிய சக்​தி, காற்​றாலை உள்​ளடக்​கிய புதுப்​பிக்​கத்​தக்க மின்​சா​ரத்தை கொள்​முதல் செய்​து, மின் விநி​யோக நிறு​வனங்​களுக்கு விற்​கும் வணி​கத்​தில் ஈடுபட பசுமை எரிசக்தி கழகம் திட்​ட​மிட்​டது. அதன்​படி, மாநிலத்​துக்​குள் மின்​சார வர்த்​தகம் மேற்​கொள்​வதற்கு உரிமம் கோரி மின்​சார ஒழுங்​கு​முறை ஆணை​யத்​திடம் பசுமை எரிசக்தி கழகம் விண்​ணப்​பித்த நிலை​யில் அதற்​கான ஒப்​புதல் வழங்​கப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து பசுமை எரிசக்தி கழக அதி​காரி​கள் கூறிய​தாவது: மின் தேவையை பூர்த்தி செய்​வ​தில், புதுப்​பிக்​கத்​தக்க மின் நிலை​யங்​களில் உற்​பத்​தி​யாகும் மின்​சா​ரத்தை முழு​வது​மாக பயன்​படுத்​த​வும், அதற்கு முன்​னுரிமை அளிக்​கும் வகை​யிலும் மாநில மின்​வாரி​யங்​கள் செயல்​பட்டு வரு​கின்​றன.

நாட்​டிலேயே காற்​றாலை, சூரியசக்தி மின் உற்​பத்​திக்கு சாதக​மான சூழல் நில​வுவ​தில் தமிழகம் முதன்மை மாநில​மாக உள்​ளது.இதற்​கிடையே, புதுப்​பிக்​கத்​தக்க மின்​சா​ரத்தை கொள்​முதல் செய்​து, மின் பகிர்​மான கழகம் உள்​ளிட்ட மின் விநி​யோக நிறு​வனங்​களுக்கு விற்​கும் வணி​கத்​தில் ஈடு​படும் வகை​யில் ‘ஜி’ வகை உள்​மாநில வர்த்தக உரிமம் கோரி மின்​சார ஒழுங்​கு​முறை ஆணை​யத்​திடம் தமிழ்​நாடு பசுமை எரிசக்தி கழகம் கடந்த ஜூலை மாதம் விண்​ணப்​பித்​தது.

தற்​போது அதற்கு ஒப்​புதல் கிடைத்​துள்​ளது. புதுப்​பிக்​கத்​தக்க ஆற்​றல் உற்​பத்​தி​யாளர்​களுக்​கும், மாநில மின்​பகிர்​மான நிறு​வனத்​துக்​கும் இடைத் தரக​ராக செயல்பட இந்த உரிமம் உதவும். இந்த உரிமத்​தால் ஆண்​டு​தோறும் 500 மில்​லியன் புதுப்​பிக்​கத்​தக்க ஆற்​றல் அலகு​களை விற்க அனு​மதி அளிக்​கப்​பட்​டுள்​ளது. அதே​போல, மாநிலத்​துக்​குள் உள்ள புதுப்​பிக்​கத்​தக்க ஆற்​றல் உற்​பத்​தி​யாளர்​களிடம் இருந்து பசுமை மின்​சா​ரத்தை பெற்​று, வர்த்தக கமிஷன் அடிப்​படை​யில் மின்​வாரி​யத்​துக்கு விற்​பனை செய்​ய​லாம்​. இவ்​வாறு அவர்​கள்​ கூறினர்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in