திமுக அரசை கண்டித்து மண்டல வாரியாக தமாகா ஆர்ப்பாட்டம்: ஜி.கே.​வாசன் அறிவிப்பு

சென்னை, கவிக்கோ அரங்கில் தமாகா சார்பில் மாநில அளவிலான பேச்சாளர்கள் பயிற்சி முகாம், கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் நடைபெற்றது. இதில், துணைத் தலைவர்கள் விடியல் எஸ்.சேகர், ஏ.எஸ்.முனவர் பாஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சென்னை, கவிக்கோ அரங்கில் தமாகா சார்பில் மாநில அளவிலான பேச்சாளர்கள் பயிற்சி முகாம், கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் நடைபெற்றது. இதில், துணைத் தலைவர்கள் விடியல் எஸ்.சேகர், ஏ.எஸ்.முனவர் பாஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Updated on
1 min read

சென்னை: திமுக அரசை கண்​டித்து மண்டல வாரி​யாக ஆர்ப்​பாட்​டம் நடத்​தப்​படும் என தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன் அறிவித்துள்​ளார். சென்​னை, கவிக்கோ அரங்​கில் தமாகா சார்​பில் மாநில அளவி​லான பேச்​சாளர்​கள் பயிற்சி முகாம் கட்​சித் தலை​வர் ஜி.கே.​வாசன் தலை​மை​யில் நடை​பெற்​றது.

இதில், மாவட்ட அளவில் தேர்வு செய்​யப்​பட்ட பேச்​சாளர்​கள் சுமார் 60 பேர் கலந்து கொண்டு பேசினர். விழா​வில் பேச்​சாளர்​களுக்கு சான்​றிதழ் வழங்கி ஜி.கே.​வாசன் பேசி​ய​தாவது: தமா​கா​வின் கொள்கை முழக்​கங்​களை பேச்​சாளர்​கள் பிரச்​சா​ர​மாக முன்​னெடுக்க வேண்​டும். குறிப்​பாக திமுக அரசின் மக்​கள் விரோத போக்​கை, தமா​கா​ கட்சியின் சிறப்​பை, மறைந்த தலை​வர்​கள் ஜி.கே.மூப்​ப​னார், காம​ராஜர் ஆகியோ​ருடைய நல்ல சிந்​தனை​களை மக்​கள் மத்​தி​யில் கொண்டு செல்ல வேண்​டும்.

மத்​தி​யில் ஆளும் பிரதமர் மோடி தலை​மை​யில் இருக்​கக்​கூடிய அரசு செய்​திருக்​கக் கூடிய சாதனை​களை மக்​களிடையே பிரச்​சா​ரம் செய்ய வேண்​டும். தமிழகம் முழு​வதும் ஆளும் திமுக அரசின் அராஜகத்தை கண்​டித்​தும், கடந்த முறை கொடுத்த சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வாக்​குறு​தி​களை நிறைவேற்ற வலி​யுறுத்​தி​யும் மண்டல வாரி​யாக ஆர்ப்​பாட்​டம், கருத்​தரங்​கம், நடத்​து​வதென தீர்​மானிக்​கப்​பட்​டிருக்​கிறது.

இதற்​கான பணி​களை சார்பு அணி​கள் ஒருங்​கிணைத்து மேற்​கொள்ள வேண்​டும். இவ்​வாறு ஜி.கே.வாசன் பேசி​னார். நிகழ்​வில், தமாகா துணைத் தலை​வர்​கள் விடியல் எஸ்​.சேகர், ஏ.எஸ்​.​முனவர் பாஷா உள்​ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in