நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளில் முதல்முறையாக இளைஞரணி உருவாக்கப்பட்டது திமுகவில்தான்: உதயநிதி பெருமிதம்

நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளில் முதல்முறையாக இளைஞரணி உருவாக்கப்பட்டது திமுகவில்தான்: உதயநிதி பெருமிதம்
Updated on
2 min read

சென்னை: ​திமுக​வில் அமைப்பு ரீதி​யாக செயல்​படும் சென்னை தென்​மேற்கு மாவட்​டத்​தின் தியாக​ராய நகர், மயி​லாப்​பூர் மற்றும் வடகிழக்கு மாவட்​டத்​தின் திரு​வெற்​றியூர் சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களுக்கு உட்​பட்டு பகு​தி, வட்டம், பாகம் அளவில் நியமிக்​கப்​பட்ட புதிய நிர்​வாகி​களின் அறி​முகக் கூட்​டம், திமுக தலை​மையகத்​தில் துணை முதல்​வரும் திமுக இளைஞரணி செயலா​ளரு​மான உதயநிதி ஸ்டா​லின் தலை​மை​யில் நேற்று நடை​பெற்​றது.

கூட்​டத்​துக்கு இளைஞரணி துணைச் செய​லா​ளர் தூத்​துக்​குடி எஸ்​.ஜோயல் முன்​னிலை வகித்​தார். கூட்​டத்​தில் உதயநிதி பேசி​ய​தாவது: இங்கு வந்​துள்​ளவர்​கள் எல்​லாம் என்​னைப் பார்க்க வந்த கூட்​ட​மில்​லை. என்​னுடன் செய​லாற்ற வந்த கூட்​டம்; கொள்​கைக் கூட்​டம். இந்​தி​யா​விலே முதன்​முதலாக ஓர் அரசி​யல் கட்​சி​யில் இளைஞரணி உரு​வாக்​கப்​பட்​டது என்​றால், அது திமுக​வில்​தான். புதி​ய நிர்​வாகி​கள் எல்​லாம் சிபாரிசு இல்​லாமல், முழுவதும் தகுதி அடிப்​படை​யில் பல்​வேறு கட்ட நேர்​காணல், ஆலோ​சனைக்கு பிறகே நியமிக்​கப்​பட்டுள்​ளனர்.

இன்று மக்​கள் பிர​தி​நி​தி​யாக உள்ள முதல்​வர், துணை முதல்​வர், அமைச்​சர்​கள், நாடாளு​மன்ற உறுப்​பினர்​கள், சட்​டப்​பேரவை உறுப்​பினர்​கள், மேயர்​கள் உள்​ளிட்​டோர் எல்​லாம் இளைஞரணி​யில் இருந்​தவர்​கள். ஒரு விளை​யாட்​டுப் போட்​டி​யில் நாம் ஈடு​படும்​போது முதலில் பயிற்சி பெறு​வோம். அது​போலத்​தான் இளைஞரணி. மக்​கள் பணிக்கு பயிற்சி அளிக்​கக்​கூடிய இடம்.

இளைஞரணி சார்​பில் ஒவ்​வொரு சட்​டப்​பேர​வைத் தொகு​திக்​கும் நூல​கம் என 100-க்​கும் மேற்​பட்ட நூல​கங்​கள் திறக்​கப்​பட்​டுள்​ளன. திறந்து வைத்​தது மட்​டும் இல்​லாமல் அவற்றை தொடர்ந்து கண்​காணிப்​புக் குழு மூலம் பராமரித்​தும் வரு​கிறோம். பதிப்​பகம் வைத்​துள்ள முதல் அரசி​யல் இயக்​கத்​தின் அணி திமுக​வின் இளைஞரணி.

திமுக ஆட்​சி​யில் மயி​லாப்​பூரில் 5000 புதிய குடி​யிருப்​பு​கள், பட்​டினப்​பாக்​கத்​தில் புதிய மீனவர் அங்​காடி, புதிய கால்​பந்து மைதானம், 2 புதிய சமு​தாயக் கூடம் கட்​டப்​பட்டு பயன்​பாட்​டுக்கு வந்​துள்​ளன. தியாக​ராய நகரில் மழைநீர் வடி​கால் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. திரு​வொற்​றியூரில் எண்​ணூர் கொசஸ்​தலை ஆற்றை தூர்​வாரி, அகலப்​படுத்​தும் பணி நடை​பெற்று வரு​கிறது. மேலும் நெட்​டுக்​குப்​பம் மீன்​பிடிப்பு இறங்கு தளம், மீன் பதப்​படுத்​தும் கிடங்கு அமைக்​கப்​பட்​டுள்​ளன. திமுக அரசின் திட்​டங்​களை மக்​களிடம் இளைஞரணி நிர்​வாகி​கள் கொண்டு சேர்க்க வேண்​டும்.

அதி​முக பொதுச்​செய​லா​ளர் பிரச்​சா​ரத்​தைத் தொடங்​கியபோது இருந்த கூட்​டம் படிப்​படி​யாக குறைந்து வரு​கிறது. இறு​தி​யாக அவரும் அவரின் ஓட்​டுநரும்​தான் பிரச்​சார வாக​னத்​தில் இருப்​பார்​கள். அதி​முக ஆட்​சி​யில் மக்​கள் மகிழ்ச்​சி​யாக இருந்​த​தாக அவர் கூறுகிறார். ஆனால், கரோனா காலத்​தில் மக்​களு​டன் களப்​பணி​யில் இருந்​தது திமுக​தான். மக்​களுக்​காக களப்​பணி செய்து உயி​ரிழந்​தவர் சென்னை மேற்கு மாவட்ட முன்​னாள் செய​லா​ளர் ஜெ.அன்​பழகன். ஒரு கட்​சி​யில் பல சார்பு அணி​கள் இருக்​கும். ஆனால் அதி​முகவே பல அணி​களாக உள்​ளது.

கடந்த தேர்​தலில் சிறப்​பாக செய​லாற்​றியதற்​காக இளைஞரணி திமுக தலை​வரிடம் வாழ்த்து பெற்​றது. அது​போல இந்த தேர்​தலிலும் இளைஞர் அணி வாழ்த்து பெற வேண்​டும் என்றார். நிகழ்​வில் எம்​எல்​ஏ-க்​கள் சென்னை வடகிழக்கு மாவட்​டச்செய​லா​ளர் மாதவரம் எஸ்​.சுதர்​சனம், தென்​மேற்கு மாவட்​டச் செய​லா​ளர் மயிலை த.வேலு, ஜெ.கருணாநி​தி, கே.பி.சங்​கர், நா​டாளு​மன்ற உறுப்​பினர் கலாநிதி வீரா​சாமி, தென்​மேற்கு மாவட்ட அமைப்​பாளர் ராஜா அன்​பழகன், வடகிழக்கு மாவட்ட அமைப்​பாளர்​ மதன்​ மற்​றும்​ மாவட்​ட நிர்​வாகி​கள்​ உள்​ளிட்​ட பலர்​ பங்​கேற்​றனர்​.

மகளிர் உரிமைத் தொகை: ஆர்.ஏ.புரத்தில் அறநிலையத் துறை சார்பில் நேற்று 32 இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து பேசிய உதயநிதி, ‘‘மகளிர் மேம்பாட்டுக்காக முதல்வர் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். `கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டம் மூலம் கடந்த 2 ஆண்டுகளாக 1.15 கோடி பேர் மாதந்தோறும் ரூ.1000 பெற்று வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வரும் `உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்களில் 40 சதவீத விண்ணப்பங்கள் மகளிர் உரிமைத் தொகை வேண்டி வந்துள்ளன. இதற்காக அத்திட்டத்தில் சில விதிகளை முதல்வர் தளர்த்தியுள்ளார். ஓரிரு மாதங்களில் தகுதியுள்ள அனைவருக்கும் மாதம் ரூ.1,000 நிச்சயமாக கிடைக்கும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in