தெற்​காசி​யா​விலேயே தமிழகம் முன்​னேறிய மாநில​மாகும்: கிருஷ்ணகிரி அரசு விழா​வில் முதல்​வர் ஸ்டா​லின் உறுதி

தெற்​காசி​யா​விலேயே தமிழகம் முன்​னேறிய மாநில​மாகும்: கிருஷ்ணகிரி அரசு விழா​வில் முதல்​வர் ஸ்டா​லின் உறுதி
Updated on
1 min read

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி​யில் நடை​பெற்ற அரசு விழா​வில் ரூ.2,885 கோடி மதிப்​பிலான திட்​டங்​களை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தொடங்​கி​வைத்​து, தெற்​காசி​யா​விலேயே முன்​னேறிய மாநில​மாக தமிழகத்தை உரு​வாக்​கிக் காட்​டு​வேன் என்று கூறி​னார்.

கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்​லூரி வளாகத்​தில் நடை​பெற்ற அரசு விழா​வில் ரூ.270.75 கோடி​யில் 193 நிறைவடைந்த பணி​களை தொடங்​கி​வைத்​தும், ரூ.562.14 கோடி​யில் 1,114 திட்​டப் பணி​களுக்கு அடிக்​கல் நாட்​டி​யும், 2,23,013 பயனாளி​களுக்கு ரூ.2,052.03 கோடி மதிப்​பிலான நலத்​திட்ட உதவி​களை வழங்​கி​யும் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பேசி​ய​தாவது: இவ்​விழா​வில் 85,711 பேருக்கு இலவச வீட்​டுமனைப் பட்​டாக்​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன.

இது​போன்ற திட்​டங்​களை​யும், பணி​களை​யும் தாங்​கிக்​கொள்ள முடி​யாத எதிர்க்​கட்​சிகள் ஆக்​கப்​பூர்​வ​மான விமர்​சனத்தை முன்​வைக்க முடி​யாமல், திமுக தேர்​தல் வாக்​குறு​தி​களை நிறைவேற்​ற​வில்லை என தவறான தகவலைக் கூறிக் கொண்​டிருக்​கின்​றனர். திமுக அளித்த 505 வாக்​குறு​தி​களில் 364 வாக்​குறு​தி​கள் நிறைவேற்​றப்​பட்​டுள்​ளன. 40 அறி​விப்​பு​கள் அரசின் பரிசீலனை​யில் உள்​ளன. மொத்​தம் 404 வாக்​குறு​தி​கள் நிறைவேற்​றப்​பட்​டுள்​ளன. மத்​திய அரசின் பரிசீலனை​யில் 37 திட்​டங்​களும், நிதி​யில்​லாமல் 64 திட்​டங்​களும் நிலு​வை​யில் உள்​ளன.

தேர்​தலில் சொல்​லாத காலை உணவுத் திட்​டம், புது​மைப் பெண், தமிழ்ப் புதல்​வன், நான் முதல்​வன், மக்​களைத் தேடி மருத்​து​வம், இன்​னு​யிர் காப்​போம் - நம்​மைக் காக்​கும் 48 உள்​ளிட்ட திட்​டங்​களை​யும் செயல்​படுத்தி இருக்​கிறோம். இந்​தி​யா​வுக்கே முன்​னோடி மாநில​மாக தமிழகம் திகழ்​கிறது. இதையெல்​லாம் மறைத்​து, பொய்​களைப் பரப்பி சிலர் மலி​வான அரசி​யல் செய்​கின்​றனர்.

நீட் விலக்கு உள்​ளிட்ட வாக்​குறு​தி​களை இப்​போதைக்கு எங்​களால் நிறைவேற்ற முடிய​வில்​லை. மக்​களுக்கு எதி​ரான மத்​திய பாஜக ஆட்சி நெடு​நாள் நீடிக்​காது. நிச்​ச​யம் ஒரு​நாள் நம் மாநிலத்​துக்​கான உரிமை​களைப் பாது​காக்​கும் ஆட்சி அமை​யும். தமிழகத்தை நிச்​ச​யம் தெற்​காசி​யா​விலேயே முன்​னேறிய மாநில​மாக உரு​வாக்​கிக் காட்​டு​வேன்.

அவதூறு, பொய், வீண்​பழிகளைப் பற்​றியெல்​லாம் நான் கவலைப்​படக்​கூடிய​வன் அல்ல. 50 ஆண்​டு​களாக இவற்​றைப் பார்த்​துக் கொண்​டு​தான் இருக்​கிறேன். 2026 தேர்​தலிலும் நிச்​ச​யம் திமுக வெற்றி பெறும். காலமெல்​லாம் மக்​களாட்சி தொடரும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

விழா​வில், மாவட்ட ஆட்​சி​யர் ச.தினேஷ்கு​மார், அமைச்​சர் அர.சக்​கர​பாணி, எம்​எல்​ஏ-க்​கள் மதி​யழகன், ராமச்​சந்​திரன், பிர​காஷ், எம்​.பி. கோபி​நாத் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர். முன்​ன​தாக, கிருஷ்ணகிரி-பெங்​களூரு சாலை​யில் நடை​பெற்ற ரோடு ஷோவில் பங்​கேற்ற முதல்​வர், மாற்​றுத் திற​னாளி​கள், பொது​மக்​களிட​மிருந்து கோரிக்கை மனுக்​களை பெற்​றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in