‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் பெறப்படும் அனைத்து மனுக்கள் மீதும் நடவடிக்கை: அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் பெறப்படும் அனைத்து மனுக்கள் மீதும் நடவடிக்கை: அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்
Updated on
2 min read

சென்னை: உங்​களு​டன் ஸ்டா​லின் திட்​டத்​தில் மக்​கள் அளிக்​கும் அனைத்து மனுக்​கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று அதி​காரி​களுக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அறி​வுறுத்​தி​யுள்​ளார்.

சென்னை தலை​மைச் செயல​கத்​தில் நேற்று காலை, உங்​களு​டன் ஸ்டா​லின் திட்​டத்​தின் செயல்​பாடு​கள் குறித்​தும், முகாமில் பெறப்​பட்ட மனுக்​கள் மீது எடுக்​கப்​பட்டு வரும் நடவடிக்​கைகள் குறித்​தும் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தலை​மை​யில் ஆய்​வுக் கூட்​டம் நடை​பெற்​றது. கூட்​டத்​தில் உங்​களு​டன் ஸ்டா​லின் திட்​டத்​தின்​கீழ் துறை வாரி​யாக பெறப்​பட்ட மனுக்​கள், அதன் மீதான தீர்வு மற்​றும் நிலுவை விவரங்​கள் குறித்து அலு​வலர்​களிடம் முதல்​வர் ஸ்டா​லின் கேட்​டறிந்​தார். மேலும், பெறப்​பட்ட மனுக்​களை ஆய்​வுசெய்​து, உரிய கால கட்​டத்​துக்​குள் தீர்வு காணப்​படு​வதை கண்​காணிக்​க​வும் துறை செயலர்​களுக்கு அறிவறுத்​தி​னார்.

மேலும், இது​வரை நடை​பெற்ற உங்​களு​டன் ஸ்டா​லின் முகாம்​களில் அரசின் 15 துறை​களில் பட்​டியலிடப்​பட்ட 46 சேவை​களில் பெறப்​பட்ட 14 லட்​சத்து 54,517 மனுக்​களில், 7 லட்​சத்து 23,482 மனுக்​களுக்கு தீர்வு காணப்​பட்​டுள்​ளது என்​றும், தீர்வு செய்​யப்​பட்ட மனுக்​களில் 5 லட்​சத்து 97,534 மனுக்​கள் ஏற்​றுக்​கொள்​ளப்​பட்​டது என்​றும் இது தீர்வு செய்​யப்​பட்ட மனுக்​களில் 83 சதவீதம் ஆகும் என்​றும் முதல்​வரிடம் அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

அப்​போது முதல்​வர் வழங்​கிய அறி​வுறுத்​தல்​கள்: தகு​தி​யுள்ள அனைத்து மனுக்​களுக்​கும் தீர்வு காண வேண்​டும். குறிப்​பாக, வரு​வாய்த் துறை, கூட்​டுறவுத் துறை, ஆதி​தி​ரா​விடர் நலத்​துறை, எரிசக்தி துறை, ஊரக வளர்ச்சி மற்​றும் ஊராட்​சித் துறை போன்ற முக்​கி​யத் துறை​களின் மனுக்​கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்​டும். நகராட்சி நிர்​வாகத் துறை​யில் சொத்​து​வரி, குடிநீர் தொடர்​பான கோரிக்​கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

வேளாண்​மைத் துறை​யில், விவ​சா​யிகளின் தேவை​களான இடு​பொருட்​கள், விவ​சாய இயந்​திரங்​கள் தொடர்​பான மனுக்​களின் மீது அதிக கவனம் செலுத்​தி, விவ​சா​யிகளின் தேவை​களை உடனடி​யாக நிறைவேற்ற வேண்​டும். ரேஷன் கார்​டு​களில் முகவரி மாற்​றம் தொடர்​பான மனுக்​கள் மற்​றும் பட்டா சம்​பந்​த​மான மனுக்​கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்​டும். அதே​போல், மாற்​றுத்​திற​னாளி​களின் கோரிக்​கைகளை கனிவுடன் பரிசீலித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

மகளிர் உரிமைத் திட்​டம்: கலைஞர் மகளிர் உரிமைத் திட்​டம் தொடர்​பான கள ஆய்​வு​களை விரைந்து முடிக்க வேண்​டும். முகாம்​கள் நடை​பெற்​ற​போது மக்​கள் தெரி​வித்த கருத்​துகளை கவனத்​தில் கொள்ள வேண்​டும். குறிப்​பாக தெரு​விளக்​கு, இணைப்​புச் சாலை, குடிநீர் போன்ற சமு​தாய கோரிக்​கைகள் தொடர்​பான மனுக்​களுக்கு முன்​னுரிமை அளிக்க வேண்​டும்.

உங்​களு​டன் ஸ்டா​லின் திட்​டத்தை பொறுத்​தவரை மக்​கள் அளிக்​கும் அனைத்து மனுக்​கள் மீதும் நடவடிக்கை எடுக்​கப்பட வேண்​டும். அதற்​காக அனைத்து அரசு துறைச் செயலர்​கள், மாவட்ட ஆட்​சி​யர்​களு​டன் தலை​மைச் செயலர் தொடர்ச்​சி​யாக ஆய்​வுக் கூட்​டங்​களை நடத்​தி, பணி​களை ஒருங்​கிணைத்​து, மக்​களின் மனுக்​களுக்கு தீர்வு காணப்​படு​வதை உறுதி செய்ய வேண்​டும்.

மேலும் திட்ட வழி​காட்​டு​தலின்​படி வீடு வீடாகச் சென்று விழிப்​புணர்வு ஏற்​படுத்​தும் பணியை சிரத்​தை​யுடன் கண்​காணிப்​பதுடன், பெறப்​படும் மனுக்​களின் மீது உரிய கால கெடு​வுக்​குள் சரி​யான தீர்வு வழங்​கு​வதை​யும் துறை செயலர்​கள், மாவட்ட ஆட்​சி​யர்​கள் உறுதி செய்ய வேண்​டும். இவ்​வாறு முதல்​வர் அறி​வுறுத்​தி​னார்.

கூட்​டத்​தில், தலை​மைச்​செயலர் நா. முரு​கானந்​தம், முதல்​வரின் முகவரித் துறை செய​லா​ளர் பெ.அ​மு​தா, நிதித்​துறை செயலர் த.உதயச்​சந்​திரன்​, அரசுத்​துறை செயலர்​கள்​ உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in