பிரபல ஜவுளி நிறுவனத்தில் வருமான வரித் துறை சோதனை: தமிழகம் முழுவதும் 20+ இடங்களில் அதிரடி

சென்னை ஆர்.ஏ. புரத்தில் உள்ள ஜவுளிக் கடை உரிமையாளரின் வீட்டில் சோதனை நடத்த வந்த வருமானவரித் துறையினர்.படம்:எஸ்.சத்தியசீலன்
சென்னை ஆர்.ஏ. புரத்தில் உள்ள ஜவுளிக் கடை உரிமையாளரின் வீட்டில் சோதனை நடத்த வந்த வருமானவரித் துறையினர்.படம்:எஸ்.சத்தியசீலன்
Updated on
1 min read

சென்னை: தமிழகம் முழு​வதும் பிரபல ஜவுளி நிறு​வனத்​துக்கு சொந்​த​மான 20-க்​கும் மேற்​பட்ட இடங்​களில் வரு​மானவரித் துறை சோதனை நடை​பெற்​றது. இதில் முக்​கிய ஆவணங்​கள் கைப்​பற்​றப்​பட்​டுள்​ள​தாக தெரவிக்​கப்​பட்​டுள்​ளது. விருதுநகர் மாவட்​டம் ஸ்ரீவில்​லிப்​புத்​தூரில் சிறிய ஜவுளி கடை​யாக தொடங்​கப்​பட்​டு, தற்​போது தமிழகத்​தின் முக்​கிய நகரங்​கள் மட்​டுமின்றி பல்​வேறு மாநிலங்​களி​லும் கிளை​களைத் தொடங்​கி பிரபலமானது.

சென்னை தி.நகர் நாகேஷ்வர​ராவ் சாலை​யில் உள்ள அந்​நிறு​வனத்​தின் தலைமை அலு​வல​கத்​துக்கு நேற்று வந்த வரு​மான வரித்துறை அதி​காரி​கள் சோதனை நடத்​தினர். தொடர்ந்​து, ஜி.என்​.செட்டி தெரு​வில் உள்ள ஜவுளிக் கடை, தெற்கு உஸ்​மான் சாலை​யில் உள்ள கடை​, குரோம்​ பேட்​டை​யில் ஜவுளி நிறு​வனத்​துக்கு சொந்​த​மான நகை கடை​யிலும் அதி​காரி​கள் சோதனை​யில் ஈடு​பட்​டனர்.

இதேபோல் ராஜா அண்​ணா​மலை புரத்​தில் ஜவுளி நிறு​வனத்​தின் உரிமை​யாளர் வீடு, கிழக்கு கடற்​கரை சாலை கானத்​தூர், நீலாங்​கரை​யில் உள்ள உரிமை​யாளரின் மகன்​கள் வீடு​களி​லும் 15-க்​கும் மேற்​பட்ட அதி​காரி​கள் சோதனை மேற்​கொண்​டனர். இங்கு சொத்து தொடர்​பான பத்​திரங்​கள், வங்​கிக் கணக்கு விவரங்​கள் உள்​ளிட்ட முக்​கிய ஆவணங்​களை கைப்​பற்றி ஆய்வு செய்து வரு​கின்​றனர்.

இதே​போல், கோவை ஒப்​பணக்​கார வீதி மற்​றும் காந்​திபுரம் பகு​தி​யில் செயல்​பட்டு வரும் ஜவுளி கடைகளி​லும் நேற்று காலை முதல் சோதனை நடந்​தது. திருச்​சி​யில் மேலரண் சாலை​யில் உள்ள ஜவுளிக்​கடை, என்​எஸ்பி சாலை​யில் உள்ள நகைக்​கடை​, மதுரை​ மேல​மாசி வீதி​யிலுள்ள ஜவுளிக் கடைமற்றும் கடை மேலா​ளர் உள்​ளிட்ட முக்​கிய அலுவலர்​களிடம் வரி ஏய்ப்பு புகார் குறித்து அதிகாரிகள் தீவிர விசா​ரணை நடத்தி சோதனை மேற்​கொண்​டனர்.

தொடர்ந்​து, இக்​கடைக்கு சொந்​த​மான ஸ்ரீவில்​லிபுத்​தூர் உட்பட 2 இடங்​களி​லும் ஒரே நேரத்​தில் வரு​மானவரித் துறை​யினர் சோதனை நடந்​தது. நெல்லை டவுனிலுள்ள ஜவுளி கடை​யிலும், அரு​கில் உள்ள அந்​நிறு​வனத்​துக்கு சொந்​த​மான பர்​னிச்​சர் கடை, நகைக்​கடை மற்​றும் வண்​ணாரப்​பேட்​டை​யில் உள்ள உரிமை​யாளரின் வீடு ஆகிய இடங்​களி​லும் 10-க்​கும் மேற்​பட்ட அதி​காரி​கள் குழு சோதனை நடத்​தி​யது.

புதுச்​சேரி அண்​ணா​சாலை​யில் உள்ள ஜவுளி கடை​யிலும் வரு​மான வரித்​துறை​யின் உதவி ஆணை​யர் தலை​மை​யில் சோதனை நடந்​தது. தமிழகம் முழு​வதும் 20-க்​கும் மேற்​பட்ட இடங்​களில் நடை​பெற்ற இந்த சோதனை​யில் பல்​வேறு முக்​கிய ஆவணங்​களை வரு​மானவரித் துறை அதி​காரி​கள் பறி​முதல் செய்​துள்​ளனர். வரிஏய்ப்பு புகாரின் அடிப்​படை​யில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக​வும், அனைத்து இடங்​களி​லும் சோதனை முழு​மை​யாக முடிவடைந்த பிறகே முழு விவரங்​களை வெளி​யிட முடியும்​ என்​றும்​ அதி​காரி​கள்​ தெரி​வித்​தனர்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in