தமிழகத்தில் நாசவேலைக்காக உளவாளிகளை அனுப்பிய விவகாரம்: பாகிஸ்தான் தூதர் அக்.15-ல் ஆஜராக உத்தரவு

அமீர் சுபைல் சித்​திக்​
அமீர் சுபைல் சித்​திக்​
Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் நாசவேலை செய்ய உளவாளி​களை அனுப்​பிய பாகிஸ்​தான் தூதரக அதி​காரி அடுத்த மாதம் 15-ம் தேதி பூந்​தமல்லி சிறப்பு நீதி​மன்​றத்தில் ஆஜராகு​மாறு என்ஐஏ அறிவிப்பு வெளியிட்​டுள்​ளது.

இவர் ஏற்​கெனவே தேடப்​படும் குற்றவாளியாக அறிவிக்​கப்​பட்​டிருந்​தார். தமிழகத்​தில் சிலர், பாகிஸ்​தான் உளவாளி​யாக செயல்​படுவதாக குற்​றச்​சாட்டு எழுந்தது. இதுகுறித்த முதல்​கட்ட விசா​ரணை​யில் தஞ்​சாவூர் மாவட்​டத்தைச் சேர்ந்த தமிம் அன்​சாரி என்​பவரை கியூ பிரிவு போலீஸார் கைது செய்​தனர்.

2014-ல் சென்னை மண்​ணடி​யில் பதுங்கி இருந்த ஜாகீர் உசேன், அவரது கூட்​டாளி சிவ​பாலன், சலீம், ரபீக் ஆகியோ​ரும் அடுத்தடுத்து கைது செய்​யப்​பட்​டனர். இவர்​கள் கொடுத்த வாக்​குமூலத்​தின் அடிப்​படை​யில் அதே ஆண்​டில் சென்னை சாலிகிராமத்​தைச் சேர்ந்த அருண் செல்​வ​ராஜ் என்​பவர் கைது செய்​யப்​பட்​டார். இதையடுத்​து, இந்த வழக்கு என்​ஐஏ-வுக்கு மாற்றப்​பட்​டது.

அவர்​களின் விசா​ரணை​யில், கைதானவர்​கள் சென்​னை​யில் உள்ள அமெரிக்க துணை தூதரகம், பெங்​களூரு​வில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் மற்​றும் விசாகப்​பட்​டினத்​தில் உள்ள இந்​திய கடற்​படை தளம் உள்பட முக்​கிய இடங்​களில் தாக்​குதல் நடத்த சதித்​திட்​டம் தீட்​டியது தெரிய​வந்​தது.

மேலும், இதற்கு மூளை​யாக செயல்​பட்​டது இலங்கை தலைநகர் கொழும்​பில் உள்ள பாகிஸ்​தான் தூதரகத்​தில் துணை தூத​ராக பணி​யாற்​றிய அமீர் சுபைல் சித்​திக்​கும் அங்கு பணிபுரிந்த மேலும் 2 பாகிஸ்​தான் அதி​காரி​களும்​தான் இந்த சதித் திட்​டத்தை வகுத்​தது தெரிய​வந்​தது.

இதையடுத்​து, பாகிஸ்​தான் தூதரக அதி​காரி சித்​திக்கை தேடப்​படு​வோர் பட்​டியலில் இணைத்து அவருக்கு எதி​ராக என்ஐஏ குற்றப்​பத்​திரிகை தாக்​கல் செய்​தது. இதையறிந்த பாகிஸ்​தான் அரசு சித்​திக்​கை​யும், மேலும் 2 பாகிஸ்​தான் அதி​காரி​களை​யும் தனது நாட்​டுக்கு திரும்ப வரவழைத்​துக் கொண்​டது.

இந்த வழக்கு பூந்​தமல்​லி​யில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதி​மன்​றத்​தில் நடை பெற்று வரு​கிறது. இந்​நிலை​யில், அமீர் சுபைல் சித்​திக் அடுத்த மாதம் 15-ம் தேதி காலை 10.30 மணிக்கு ஆஜராக நீதி​மன்​றத்தில் உத்​தரவிட்​டுள்​ளதாக என்ஐஏ வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in