போலீஸார் மீதான தாக்குதல்: நயினார் நாகேந்திரன் கண்டனம்

போலீஸார் மீதான தாக்குதல்: நயினார் நாகேந்திரன் கண்டனம்
Updated on
1 min read

சென்னை: பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: சென்னை புளியந்தோப்பு பகு​தி​யில் மது​போதை​யில் வழிப்​பறி​யில் ஈடு​பட்​ட​வர்​களை மடக்​கிப் பிடித்த போலீ​ஸார் மீது, நடுரோட்​டில் போதைக் கும்​பல் தாக்​குதல் நடத்​தி​யுள்ள சம்​பவம் அதிர்ச்சி அளிக்​கிறது.

கைது செய்து விசா​ரணைக்​காக காவல் நிலை​யத்​துக்கு அழைத்து வரப்​பட்ட பிறகும்​கூட, ஆய்​வாளரின் முன்​னிலை​யிலேயே கொஞ்​சம்​கூட பயமின்​றி, தகாத வார்த்​தைகளால் கொலை மிரட்​டல் விடு​வது, காவல் நிலை​யத்தை அடித்து நொறுக்​கு​வது என அராஜகமாக நடந்​துள்​ளது கண்​டனத்​துக்​குரியது.

காவல் துறை​யினர் மீது மக்​களுக்கு நம்​பிக்​கை​யில்​லை,குற்​ற​வாளி​களுக்கு பயமில்​லை. கடந்த 4 ஆண்​டு​களில் தமிழகம் முழு​வதும் காவல் துறை​யினர் மீதான தாக்​குதல்​கள் அதி​கரித்​துக் கொண்டே செல்​கின்​றன. இது பெரும் ஆபத்​தானது. எனவே, காவல் துறை​யினரின் பாது​காப்பை உறுதி செய்​வதுடன், அவர்​கள் எவ்​வித சமரச​முமின்றி பணி​யாற்ற தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்​டும். இவ்​வாறு அறிக்​கையில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in