‘ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுப்பு மூலமாக ஒரு கோடி குடும்பங்கள் இணைப்பு: முதல்வர் ஸ்டாலின் தகவல்

‘ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுப்பு மூலமாக ஒரு கோடி குடும்பங்கள் இணைப்பு: முதல்வர் ஸ்டாலின் தகவல்
Updated on
1 min read

சென்னை: ‘ஓரணி​யில் தமிழ்​நாடு’ முன்​னெடுப்பு மூலம் இணைந்த ஒரு கோடி குடும்​பத்​தினர் செப்​.15-ம் தேதி பல்​வேறு கருத்​துகளை முன்​வைத்து உறு​தி​மொழி ஏற்க உள்​ள​தாக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​துள்​ளார்.

‘ஓரணி​யில் தமிழ்​நாடு’ முன்​னெடுப்பு மூலம், தமிழகத்​தில் உள்ள வாக்​குச்​சாவடிகள் தோறும் 30 சதவீதம் வாக்​காளர்​களை திமுக​வில் உறுப்​பின​ராக்​கும் திட்​டத்தை கடந்த ஜூலை 3-ம் தேதி முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் சென்​னை​யில் தொடங்கி வைத்​தார்.

அதைத்​தொடர்ந்து உறுப்​பினர் சேர்க்​கையை திமுக​வினர் மேற்​கொண்டு வரு​கின்​றனர். இந்​நிலை​யில், முதல்​வர் நேற்று வெளியிட்ட சமூக வலை​தளப்​ப​தி​வில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தின் மண், மொழி, மானம் காக்க நமது ‘ஓரணி​யில் தமிழ்​நாடு’ இயக்​கத்​தில் ஒரு கோடிக்​கும் மேலான குடும்​பங்​கள் இணைந்​துள்​ளன. அவர்​கள் அனை​வரும் ஒன்​றிணைந்​து, அண்ணா பிறந்த நாளான செப்​.15-ம் தேதி தமிழகம் எங்​கும் 68 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட பூத் வாரி​யாக கீழ்க்​கண்ட உறு​தி​மொழியை முன்​மொழிய உள்​ளனர்.

அதன்​படி, “தமிழகத்தை தலைகுனிய விட​மாட்​டேன். ஓரணி​யில் தமிழ்​நாடு இயக்​கத்​தில் இணைந்​துள்ள ஒரு கோடிக்​கும் மேற்​பட்ட குடும்​பத்​தினரும் சேர்ந்​து, தமிழகத்தை தலைகுனிய விட​மாட்​டோம். தமிழக நாடாளு​மன்ற உறுப்​பினர்​களின் விகி​தாச்​சா​ரத்​தைக் குறைக்​கும் நியாயமற்ற தொகுதி மறு​வரையறைக்கு எதி​ராக நான் போராடு​வேன்.

வாக்​காளர் பட்​டியல் மோசடி மூலம் தமிழக மக்களின் வாக்​குரிமை​யைப் பறிக்​கும் சிறப்பு திருத்​தத்​துக்கு எதி​ராக நிற்​பேன். நீட் மற்​றும் இளைஞர்​களை முடக்​கும் எந்​தவொரு திட்​டத்​தை​யும் எதிர்த்து நிற்​பேன், நம் மாணவர்​களுக்கு உரிய கல்வி நிதிக்​காகப் போராடு​வேன்.

தமிழ் மொழி, பண்​பாடு மற்​றும் பெரு​மைக்கு (நன்​ம​திப்​புக்​கு) எதி​ரான எந்​தவொரு பாகு​பாட்​டை​யும் எதிர்த்​துப் போராடு​வேன். பெண்​கள் - விவ​சா​யிகள் - மீனவர்​கள் - நெச​வாளர்​கள் - தொழிலா​ளர்​கள் என ஒவ்​வொரு உழைக்​கும் வர்க்​கத்​தின் நலன்​களை​யும் பாது​காக்​கத் தேவை​யான நிதிக்​காகப் போ​ராடு​வேன்” என உறுதி ஏற்​கிறேன்​.” இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in