திமுக இளைஞர் அணியினர் அடுத்த 6 மாதம் ஒவ்வொரு நொடியும் களப்பணியாற்ற வேண்டும்: உதயநிதி அறிவுறுத்தல்

மறைமலை நகரில் நடந்த திமுக கூட்டத்தில் பேசும் உதயநிதி ஸ்டாலின்.
மறைமலை நகரில் நடந்த திமுக கூட்டத்தில் பேசும் உதயநிதி ஸ்டாலின்.
Updated on
2 min read

மறைமலை நகர் / குன்றத்தூர்: ​தி​முக இளைஞர் அணியினர் அடுத்த 6 மாதம் ஒவ்​வொரு நொடி​யும் களப்​பணி​யாற்ற வேண்​டும் என்று துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் அறி​வுறுத்​தி​யுள்​ளார்.

செங்​கல்​பட்டு சட்​டப்​பேரவை தொகு​திக்கு உட்​பட்ட கிளை, வார்​டு, கழக நிர்​வாகி​கள் ஆலோ​சனை கூட்​டம் மற்​றும் இளைஞர் அணி புதிய நிர்​வாகி​கள் அறி​முக கூட்​டம் நேற்று மறைமலை நகரில் நடை​பெற்​றது:- கூட்​டத்​தில் திமுக இளைஞரணி செய​லா​ள​ரும், தமிழக துணை முதல்​வரு​மான உதயநிதி ஸ்டா​லின் கலந்து கொண்டு பேசி​ய​தாவது:

திரா​விட முன்​னேற்ற கழகம் தொடங்கி இன்று 75 ஆண்​டு​களை நிறைவு செய்து பவள விழாவைக் கொண்​டாடிக் கொண்​டிருக்​கிறோம். திமுக தலை​வ​ராக ஸ்டா​லின் பொறுப்​பேற்​று, சந்​தித்த அத்​தனை தேர்​தலை​யும் வெற்றி பெற்​றிருக்​கிறோம். தற்​போது நம்​முடைய ஆட்சி பல்​வேறு மாநில அரசுகளுக்கு எடுத்​துக்​காட்​டாக இருக்​கிறது.

நம்​முடையது திரா​விட மாடல் அரசு என்​பதை நீங்​கள் மக்​களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்​டும். திமுக இளைஞர் அணியினர் அடுத்த 6 மாதம் ஒவ்​வொரு நொடி​யும் களப்​பணி​யாற்ற வேண்​டும். எனக்கு எத்​தனையோ பொறுப்​பு​கள் கிடைத்​திருந்​தா​லும் என்​னுடைய மனதுக்கு மிக​வும் நெருக்​க​மான ஒரு பொறுப்பு இளைஞர் அணி செய​லா​ளர் என்ற பொறுப்​பு​தான்.

பொறுப்பை உணர்ந்து நீங்​கள் செயல்பட வேண்​டும். இளைஞரணி சார்​பாக களத்​தில் மட்​டுமல்ல கருத்​தி​யல் ரீதி​யாக​வும் பல பணி​களை மேற்​கொண்டு இருக்​கிறோம். வெல்​வோம் 200 படைப்​போம் வரலாறு. இவ்​வாறு உதயநிதி ஸ்டா​லின் பேசி​னார்.

மறைமலை நகருக்கு வருகை தந்த துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லினுக்கு மறைமலை நகர் நகராட்சி அலு​வல​கம் அருகே மேள​தாளம் முழங்க காஞ்சி வடக்கு மாவட்ட செய​லா​ளர் தா.மோ.அன்​பரசன், எம்​.எல்.ஏ வரலட்​சுமி மதுசூதனன், எம்​.பி. செல்​வம், மாவட்ட இந்து சமய அறங்​காவலர் குழு தலை​வர் மதுசூதனன் ஆகியோர் தலை​மை​யில் சிறப்​பான வரவேற்பு அளிக்​கப்​பட்​டது.

நிகழ்ச்​சி​யில் பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி, மாநில, மாவட்ட இளைஞரணி அணி நிர்​வாகி​கள், உள்​ளாட்சி பிர​தி​நி​தி​கள் உட்பட ஏராள​மானோர் கலந்து கொண்​டனர். காஞ்​சிபுரம் மாவட்​டம் குன்​றத்​தூரில் நடை​பெற்ற அரசு நலத்​திட்ட உதவி​கள் வழங்​கும் விழா​வில் துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் பங்​கேற்று 7,297 பேருக்கு ரூ.362.25 கோடி மதிப்​பில் நலத்​திட்ட உதவி​களை வழங்​கி​னார்.

மேலும் ரூ.8.24 கோடி​யில் 13 திட்​டப் பணி​களை திறந்து வைத்​ததுடன், ரூ.7.43 கோடி மதிப்​பில் 5 புதிய திட்​டப் பணி​களுக்​கும் அடிக்​கல் நாட்​டி​னார். இந்த நிகழ்ச்​சி​யில் அமைச்​சர் தா.மோ.அன்​பரசன், மக்​களவை உறுப்​பினர் டி.ஆர்​.​பாலு, சட்​டப்​பேரவை உறுப்​பினர் கு.செல்​வப்​பெருந்​தகை, ஆட்​சி​யர் கலைச்​செல்​வி, மாவட்ட வரு​வாய் அலு​வலர் செ.வெங்​கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இயக்​குநர் ஆர்த்​தி, சார் ஆட்​சி​யர் ஆஷிக் அலி, மாவட்ட ஊராட்சி குழுத்​தலை​வர் படப்பை ஆ.மனோகரன், குன்​றத்​தூர் வடக்கு ஒன்​றிய செயலர் பட்​டூர் எஸ்​.ஜபருல்​லா, குன்​றத்​தூர் மத்​திய ஒன்​றியச் செயலர் ஏ.வந்தே மாதரம், திரு​முடி​வாக்​கம் ஊராட்சி மன்​றத் தலை​வர் இ.மணி, குன்​றத்​தூர் நகரச் செயலர் மற்​றும் நகர மன்​றத் தலை​வர் கோ.சத்​தி​யமூர்த்தி உட்பட பலர் பங்​கேற்​றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in