அதிமுகவை ஒருங்கிணைக்கும் செங்கோட்டையனின் முயற்சி நிச்சயம் வெற்றி பெறும்: ஓபிஎஸ் கருத்து

அதிமுகவை ஒருங்கிணைக்கும் செங்கோட்டையனின் முயற்சி நிச்சயம் வெற்றி பெறும்: ஓபிஎஸ் கருத்து
Updated on
1 min read

பெரியகுளம் / சென்னை: முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் தேனி மாவட்​டம் பெரியகுளத்தில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: அதி​முக ஒருங்​கிணைந்​தால்​தான் வெற்​றி​பெற முடி​யும். இதற்கான முயற்சியை தற்போது செங்​கோட்​டையன் முன்​னெடுத்​துள்​ளார். அவரது முயற்சி நிச்சயம் வெற்​றி​பெறும்.

குடியரசு துணைத் தலை​வ​ராக பொறுப்​பேற்க உள்ள சி.பி.​ரா​தாகிருஷ்ணன் நல்​ல​வர். இவரை ஆதரித்து அனைத்​திந்​திய அண்ணா திரா​விடக் கழக ஒருங்​கிணைப்​புக் குழு உறுப்​பின​ரான தர்​மர் எம்​.பி. வாக்​களித்​துள்​ளார். இவ்​வாறு ஓ.பன்னீர்​செல்​வம் கூறி​னார்.

கட்சியின் கட்டுப்பாட்டை மீறக்கூடாது... அதிமுக எம்.பி. தம்பிதுரை டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “நாடாளுமன்ற வளாகத்தில் அமித்ஷாவை நான் சந்தித்தேன். செங்கோட்டையனை அழைத்துப் பேசியதாக அமித்ஷா என்னிடம் கூறவில்லை. எந்த கட்சியாக இருந்தாலும், அதற்கு கட்டுப்பட்டுத்தான் உறுப்பினர்கள் செயல்பட வேண்டும்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in