அமித் ஷா, நிர்மலா சீதாராமனுடன் பேசியது என்ன? - செங்கோட்டையன் விவரிப்பு

அமித் ஷா, நிர்மலா சீதாராமனுடன் பேசியது என்ன? - செங்கோட்டையன் விவரிப்பு
Updated on
1 min read

சென்னை: மத்திய அமைச்சர்கள் அமித் ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை சந்தித்தபோது பேசிய விவரங்கள் குறித்து செங்கோட்டையன் சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.

டெல்லியில் இருந்து திரும்பிய பின் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், “நேற்று ஹரித்வார் செல்வதாக சொல்லிவிட்டு சென்றேன். டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனால் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தேன். அவர்களிடம் இன்றைய அரசியல் சூழல் குறித்து கருத்துகள் பரிமாறப்பட்டன. எல்லோரும் ஒன்றிணைய வேண்டும், இயக்கம் வலுப்பெற வேண்டும் என்று கருத்துகளை அவர்களிடம் எடுத்துச் சொன்னோம்.

ஆகவே, இதன் அடிப்படையில் இதுகுறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்துகளை வெளிப்படுத்துகிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஜனநாயக உரிமை உண்டு, இது வரவேற்கத்தக்கது. உள்துறை அமைச்சரை சந்தித்தபோது, அங்கே ரயில்வே அமைச்சர் வருகை தந்தார். அப்போது ஈரோட்டிலிருந்து புறப்படும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில், முதலில் 10 மணிக்கு புறப்பட்டது. இப்போது முன்கூட்டியே புறப்படுவதால் சிரமம் ஏற்படுவதாக சொன்னேன். அதுகுறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக சொன்னார்கள். மக்கள் பணி செய்வதற்கும், இயக்கம் வலுப்பெறுவதற்கும் நான் தொடர்ந்து பணியாற்றுவேன்” என்று செங்கோட்டையன் கூறினார்.

முன்னதாக, அதிமுக​வில் இருந்து பிரிந்து சென்​றவர்​களை இணைக்​கும் முயற்​சியை 10 நாட்​களில் தொடங்க வேண்​டும் என அக்​கட்​சி​யின் பொதுச் ​செயலாளர் பழனி​சாமிக்​கு, முன்​னாள் அமைச்​சர் கே.ஏ.செங்​கோட்​டையன் கெடு விதித்​தார். இதைத் தொடர்ந்து அவரிடம் இருந்த அமைப்​புச் செய​லா​ளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்​டச் செய​லா​ளர் ஆகிய பதவி​களை பறித்து பழனி​சாமி நடவடிக்கை எடுத்​தார். மேலும், அவருடன் கோபி, நம்​பியூரைச் சேர்ந்த சில நிர்​வாகி​களின் பதவி​களும் பறிக்கப்​பட்​டன.

இதைத் தொடர்ந்து முன்​னாள் அமைச்​சர் செங்​கோட்​டையனை ஈரோடு மாவட்​டம் கோபி​யில் உள்ள அவரது இல்​லத்​தில் ஆதரவாளர்​கள் தொடர்ந்து சந்​தித்து ஆதரவு தெரி​வித்​தனர். இதன் தொடர்ச்சியாக, செங்​கோட்​டையன் கோபி​யில் இருந்து புறப்பட்டு நேற்று காலை கோவை வந்​தார். பின்​னர் கோவை, பீளமேட்டில் உள்ள சர்​வ​தேச விமான நிலை​யத்​தில் இருந்து புதுடெல்லி புறப்​பட்​டுச் சென்​றார். திடீர் திருப்பமாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்தில் செங்கோட்டையன் நேற்று இரவு சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in