வெளியே ஜொலிப்பு, உள்ளே புதர்... காஞ்​சியில் கவலைக்குரிய நிலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா!

பூங்காவுக்குள் புதர் மண்டிய நிலையில் உள்ள இருக்கைகள்.
பூங்காவுக்குள் புதர் மண்டிய நிலையில் உள்ள இருக்கைகள்.
Updated on
1 min read

​காஞ்​சிபுரம் செவிலிடுமேடு பகு​தி​யில் உள்ள கலைஞர் நூற்​றாண்டு பூங்கா வெளிப்​புறத்​தில் பளபளப்​பாக ஜொலிக்​கும் நிலை​யிலும், உள்​புறத்​தில் புதர் மண்​டிய நிலை​யிலும் உள்​ளது. இந்த பூங்​காவை முறை​யாக பாமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று சமூக ஆர்​வலர்​கள் வலி​யுறுத்​துகின்​றனர்.

காஞ்​சிபுரம் மாநக​ராட்​சி​யின் கட்​டுப்​பாட்​டில் மொத்​தம் 68 பூங்​காக்​கள் உள்​ளன. இவற்​றில் சுமார் 20 பூங்​காக்​கள் மட்​டுமே பயன்​படுத்​தக் கூடிய நிலை​யில் உள்​ளன. இவ்​வாறு பயன்​படுத்​தக் கூடிய நிலை​யில் உள்ள பூங்​காக்​களை முறை​யாக பராமரிக்க வேண்​டும் என்று சமூக ஆர்​வலர்​கள் வலி​யுறுத்​துகின்​றனர்.

செவிலிமேடு, 4-வது மண்​டலம், வார்டு எண் 43 சம்​பந்​தமூர்த்தி நகரில் கலைஞர் நூற்​றாண்டு பூங்கா அமைக்​கப்​பட்​டுள்​ளது. கடந்த 2022-ம் ஆண்டு அமைக்​கப்​பட்ட இந்த பூங்கா வெளிப்​புறத்தில் புதிது​போல் உள்​ளது. ஆனால் பூங்​கா​வின் உள்​புறம் புதர் மண்​டிய நிலை​யில் உள்​ளது. கலைஞர் நகர்​புற மேம்​பாட்​டுத் திட்​டத்​தின் கீழ் கட்​டப்​பட்ட இந்த பூங்​காவை மாநக​ராட்சி முறை​யாக பராமரிக்க வேண்​டும் என்று சமூக ஆர்​வலர்​கல் வலி​யுறுத்​துகின்​றனர்.

இது குறித்து அந்​த பகு​தி​யைச் சேர்ந்த சமூக ஆர்​வலர் வி.வெங்​கேடசன் கூறுகை​யில் கலைஞர் நூற்​றாண்டு பூங்கா இந்​த பகு​தி​யில் அமைக்​கப்​பட்டு 3 வருடங்​கள்​தான் ஆகிறது. ஆனால் இந்த பூங்கா முறை​யாக பராமரிக்​கப்​பட​வில்​லை. பொது​மக்​கள் உட்​காரும் இடங்​களில் எருக்​கஞ்​செடிகள் முளைத்​தும், புதர் மண்​டிய நிலை​யிலும் உள்​ளது. இந்​த பூங்​காவை பராமரித்து பயன்​பாட்​டுக்கு கொண்டு வர வேண்​டும் என்​றார்.

இது குறித்து மேலும் சிலர் கூறுகை​யில் இந்த கலைஞர் நூற்​றாண்டு பூங்கா மட்​டுமல்ல அண்ணா நூற்​றாண்டு பூங்​கா, புதிய நகர்களில் பூங்கா​வுக்கு இடம் ஒதுக்​கப்​பட்டு நகராட்​சி​யிடம் ஒப்​படைக்​கப்​படும் பூங்கா என பல்​வேறு பூங்​காக்​கள் முறை​யான பராமரிக்​கில்​லாமல் கிடக்​கின்​றன. சில பூங்​காக்​கள் முற்​றி​லும் பராமரிக்​கப்​ப​டா​மல் சமூக விரோ​தி​களின் கூடார​மாக மாறியுள்ளன.

இது குறித்து மாநக​ராட்சி அலு​வலர்​கள் சிலரிடம் கேட்​ட​போது பூங்​காக்​களை மாநக​ராட்​சி​யில் இருக்​கும் நிதியை கொண்டு பொது​மக்​கள் அதி​கம் பயன்​படுத்​தும் பூங்​காக்​கள் பராமரிக்​கப்​படு​கின்​றன. சிறு பூங்​காக்​களை பராமரிக்க அதிக நிதி தேவைப்படு​கிறது. அந்த நிதியை அரசிடம் இருந்து கேட்​டு பெற்​று​தான் பராமரிக்க முடி​யும். அதே​போல் பூங்​கா​வில் சமூக விரோ தி​களின் நடமாட்​டம் இருந்​தாலோ, பூங்கா​வுக்கு வரும் பொது​மக்​களுக்கு இடையூறு ஏற்​படுத்​தி​னாலோ அவர்​கள் மீது காவல்​துறை​யின்​ மூலம்​ நடவடிக்​கை எடுக்​கப்​படும்​ என்​றனர்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in