

மன அழுத்தத்தால் பெண்களுக்கு குழந்தையின்மை பிரச்சினை அதிகரித்து வருகிறது என்று இந்திய மருத்துவ சங்கத்தின் செயலாளர் ஹேமலதா கணேசன் கூறியுள்ளார்.
இந்தியாவுக்கான சர்வதேச அமைதி மையம் சார்பில் ஐ.நா சபையின் சர்வதேச இளைஞர் தின விழா, கிண்டி செல்லம்மாள் மகளிர் கலை கல்லூரியில் செவ் வாய்க்கிழமை நடைபெற்றது.
சர்வதேச அமைதி மையம் சார்பில் தென் மண்டல அமைதி தூதருக்கான விருதுகள் கல்லூரி முதல்வர் விஜயலட்சுமி, கட்டிட வடிவமைப்பாளர் சசிரேகா, ப்ராக் சிமம் பிட்னஸ் தலைவர் சுசிலாமாறன், மையத்தின் ஒருங்கிணைப்பாளர் முரளி ராகவன் ஆகியோருக்கு வழங்கப் பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இந்திய மருத்துவ சங்கத்தின் செயலாளர் ஹேமலதா கணேசன் கலந்து கொண்டு பேசியதாவது:
பெண் குழந்தைகள் பெரும் பாலும் இளம் பருவத்தில் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த இளம் பருவவயதில் அதிக உணர்ச்சிவசப்பட கூடிய எண்ணத்தில் அவர்கள் இருப்பார் கள். குறிப்பாக 10 வயது முதல் 19 வயது வரை உள்ள பெண் குழந்தைகளை பெற்றோர்கள் அன்பான அரவணைப்பில் வைத்து கொள்ள வேண்டும். குழந்தைகளிடம் தாழ்வு மனப்பான்மை உருவாக்கும் சொற்களை பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் பயன்படுத்த கூடாது.
பருவ வயதில் மன உளைச் சலுக்கு ஆளாகும் பெண்களுக்கு எதிர்காலத்தில் குழந்தையின்மை பாதிப்பு ஏற்படுகிறது. குறிப் பாக கருப்பையில் கரு முட்டை உருவாவதில் சிக்கல் உண்டா கிறது. சமீபகாலமாக மன அழுத்தத்தால் குழந்தையின்மை அதிகரிப்பு 50 சதவீதம் உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் இந்திய மகளிர் சங்கத்தின் தலைவர் பத்மா வெங்கட்ராமன், கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.