தமிழகம் புதுவையில் மழை வாய்ப்பு

தமிழகம் புதுவையில் மழை வாய்ப்பு
Updated on
1 min read

தென்மேற்கு பருவ மழை காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரை பதிவான மழை நிலவரப்படி கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியில் 5 செ.மீ., பேச்சிப்பாறையில் 4 செ.மீ., கோவை மாவட்டம் வால்பாறை, சின்னகலார், கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை ஆகிய இடங்களில் 3 செ.மீ., கோவை மாவட்டம் பொள்ளாச்சி, திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம், சேலம் மாவட்டம் தம்மம்பட்டி ஆகிய இடங்களில் 2 செ.மீ. மழை பெய்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை ஆங்காங்கே பெய்யும். கன மழை பெய்ய வாய்ப்பில்லை. சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in