Published : 23 Jul 2018 08:50 AM
Last Updated : 23 Jul 2018 08:50 AM

டெல்டா பாசனத்துக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பு

காவிரி டெல்டா பாசனத்துக்காக கல்லணையில் இருந்து, காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால் வாய் மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது.

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதி களில் பெய்துவரும் கனமழை காரணமாக கர்நாடக மாநிலத் தில் உள்ள அணைகள் நிரம்பின. இதையடுத்து கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணை யின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. தொடர்ந்து அணை யின் நீர்மட்டம் 100 அடியை தாண்டியதால், காவிரி டெல்டா பாசனத்துக்காக கடந்த 19-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தமிழக முதல்வர் பழனிசாமி தண்ணீரைத் திறந்து வைத்தார். தொடக்கத்தில் 2,000 கனஅடியாக இருந்து தண்ணீர் திறப்பு, படிப்படியாக அதிகரித்து தற்போது 20,000 கனஅடி திறக்கப்படுகிறது.

மேட்டூரில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், நேற்று முன் தினம் மாலை திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணையை வந்தடைந்து, அங்கிருந்து நேற்று நள்ளிரவு தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையை வந்தடைந்தது.

இதைத்தொடர்ந்து, நேற்று முற்பகல் 11 மணியளவில் கல் லணையில் இருந்து பாசனத்துக் காக தண்ணீர் திறக்கப்பட்டது. முன்னதாக, கல்லணையில் உள்ள கொள்ளிடம் பிரிவு மதகின் கீழ்பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயில், கருப்பண்ணசாமி கோயில், கரிகால் சோழன் சிலை அருகில் உள்ள ஆதிவிநாயகர் கோயில் ஆகியவற்றில் மேள தாளத்துடன் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ஊர்வலமாக வந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஆகியவற் றின் மதகில் இருந்து தண்ணீரைத் திறந்து விட்டனர்.

தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் இரா.துரைக் கண்ணு, ஆர்.காமராஜ், ஓ.எஸ்.மணியன், வெல்லமண்டி என்.நடராஜன், எஸ்.வளர்மதி, சி.விஜய பாஸ்கர், எம்பிக்கள் ஆர்.வைத்தி லிங்கம், தஞ்சாவூர் கு.பரசுராமன், மயிலாடுதுறை ஆர்.கே.பாரதி மோகன், பெரம்பலூர் மருதராஜா, அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர்கள் தஞ்சாவூர் ஆ.அண்ணாதுரை, திருவாரூர் இல.நிர்மல்குமார், நாகப்பட்டி னம் சீ.சுரேஷ்குமார், திருச்சி கே.ராஜாமணி, புதுக்கோட்டை சு.கணேஷ், அரியலூர் மு.விஜய லட்சுமி, பொதுப்பணித்துறை திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும், புதுச்சேரி மாநில வேளாண்மைத்துறை அமைச்சர் கமலக்கண்ணன், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் கேசவன், புதுச்சேரி மாநில பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் சண்முகசுந்தரம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து, மதகுகளில் இருந்து திறந்துவிடப்பட்டு சீறி பாய்ந்த தண்ணீரில் விதைநெல், மலர்களைத் தூவி காவிரியை வழிபட்டனர்.

இதையடுத்து படிப்படியாக கல்லணையில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 7,000 கனஅடி யும், வெண்ணாறில் 7,000 கனஅடியும், கல்லணை கால் வாயில் 1,000 கனஅடியும், கொள்ளி டம் ஆற்றில் 2,000 கனஅடியும் என மொத்தம் விநாடிக்கு 17,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

கல்லணையில் இருந்து திறக் கப்பட்ட தண்ணீரைக் கொண்டு தஞ்சாவூர், திருவாரூர், நாகப் பட்டினம், கடலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் 12 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. கல்லணையில் தண்ணீர் திறக்கப் பட்டதால் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x