திருச்சி பஞ்சப்பூர் அருகே எனக்கு நிலம் இருந்தால் பழனிசாமியே எடுத்துக் கொள்ளலாம்: அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்

திருச்சி மேலப்புதூர் பிலோமினாள் பள்ளியில் முதல்வரின் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை நேற்று தொடங்கிவைத்து, குழந்தைகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட அமைச்சர் கே.என்.நேரு.
திருச்சி மேலப்புதூர் பிலோமினாள் பள்ளியில் முதல்வரின் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை நேற்று தொடங்கிவைத்து, குழந்தைகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட அமைச்சர் கே.என்.நேரு.
Updated on
1 min read

திருச்சி: பஞ்​சப்​பூரில் அமைச்​சர் கே.என்​. நேரு​வுக்கு 300 ஏக்​கர் நிலம் இருப்​ப​தால்​தான், அங்கு பேருந்து முனை​யம் அமைக்கப்பட்டுள்​ள​தாக அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​யிருந்த நிலை​யில்,‘எனக்கு அங்கு 300 ஏக்​கர் நிலம் இருந்தால், அதை பழனி​சாமியே எடுத்​துக் கொள்​ளலாம்’ என்று அமைச்​சர் கே.என்​.நேரு கூறினார்.

திருச்சி மேலப்​புதூர் புனித பிலோமி​னாள் பெண்​கள் மேல்​நிலைப் பள்​ளி​யில் நேற்று முதல்​வரின் காலை உணவுத் திட்​டத்தை தொடங்கி வைத்த பின்​னர் அமைச்​சர் கே.என்​.நேரு செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: துறையூரில் ஆக.24-ம் தேதி நடை​பெற்ற அதி​முக கூட்​டத்​தில் 108 ஆம்​புலன்ஸ் வந்​தது, நோயாளியை காப்​பாற்​று​வதற்​காகவே தவிர, வேறு எந்த நோக்​கத்​துக்​காக​வும் அல்ல. துறையூரில் ஆம்​புலன்ஸ் ஓட்​டுநர் தாக்​கப்​பட்​டதற்கு அதி​முக​வினரே காரணம். அவர்​களே 108 ஆம்​புலன்​ஸுக்கு போன் செய்து வரவழைத்து தாக்​கிய​தாக காவல் துறை தரப்​பில் எனக்கு தகவல் தெரிவிக்​கப்​பட்​டது.

பஞ்​சப்​பூர் பகு​தி​யில் எனக்கு 300 ஏக்​கர் நிலம் இருப்​ப​தால்​தான், அங்கு பேருந்து முனை​யம் அமைக்​கப்​பட்​டுள்​ள​தாக அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​யிருக்​கிறார். அவர் கூறியிருப் ​ப​தைப்​போல, அங்கு எனது பெயரிலோ, என்​னைச் சார்ந்தவர்கள் பெயரிலோ நிலங்​கள் இருந்​தால், அதை அரசே கையகப்​படுத்​திக் கொள்​ளலாம். நானே கையெழுத்​திட்டு தரு​கிறேன். வேண்​டுமென்​றால் பழனி​சாமியே அந்த நிலத்தை எடுத்​துக் கொள்​ளலாம்.

அதிமுகவுக்குள்தான் பிரச்சினை: எங்​களு​டைய கட்​சித் தலை​வர் முதல்​வர் மு.க.ஸ்​டா​லினுடன் நான் இணக்​க​மாகத்​தான் உள்ளேன். எங்​களுக்​குள் எந்​தப் பிரச்​சினை​யும் இல்​லை. ஆனால் பழனி​சாமிக்​கும், தங்​கமணிக்​கும் இடையே​தான் பிரச்​சினை நிலவுவ​தாக அதி​முக நிர்​வாகி​களே வெளிப்​படை​யாக கூறி வரு​கின்​றனர். தமிழகத்​தில் மழைக்​காலம் தொடங்​கு​வதற்கு முன்பாகவே, அனைத்து இடங்​களி​லும் மழைநீர் வடி​கால் உள்​ளிட்ட அனைத்து கட்​டமைப்பு பணி​களும் சரி​யான முறை​யில் முடிக்​கப்​பட்​டுள்​ளன. இவ்​வாறு அவர் கூறி​னார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in