

தமிழ்நாடு வனச் சார்நிலைப் பணி 2006-2009-ல் அடங்கிய வனச்சரகர் பதவிக்கான 80 காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பும் பொருட்டு எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.
அதில், விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண், இட ஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் தற்காலிகமாக நேர்காணல் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட விண்ணப்ப தாரர்களுக்கு 22.08.2012 மற்றும் 23.08.2012 அன்று நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டது.
நேர்முகத் தேர்வில் கலந்து கொண்ட விண்ணப்பதாரர்களின் எழுத்துத் தேர்வு மற்றும் நேர் முகத் தேர்வு மதிப்பெண் அடங்கிய ஒருங்கிணைந்த மதிப் பெண் பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணைய தளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தகவலை டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
வனச்சரகர் தேர்வு மதிப்பெண் பட்டியல் நேர்முகத் தேர்வு நடந்து முடிந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கமாக, நேர்முகத்தேர்வு முடிவடையும் நாள் அன்று அல்லது மறுநாள் மதிப்பெண் விவரம் வெளியிடப்படுவது வழக்கம்.