வாக்குகளை பெறுவதற்காக விஜயகாந்த் பெயரை விஜய் பயன்படுத்தினால் மக்கள் ஏற்க மாட்டார்கள்: பிரேமலதா திட்டவட்டம்

தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு, அக்கட்சி சார்பில் மருத்துவ முகாம் மற்றும் நலத்திட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர் பிரேமலதா, பொருளாளர் சுதீஷ் உள்ளிட்டோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு, அக்கட்சி சார்பில் மருத்துவ முகாம் மற்றும் நலத்திட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர் பிரேமலதா, பொருளாளர் சுதீஷ் உள்ளிட்டோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
Updated on
1 min read

சென்னை: விஜய​காந்த் பெயரை பயன்​படுத்தி அவருடைய வாக்​கு​களை விஜய் பெற நினைத்​தால் மக்​கள் அதை ஏற்​றுக்​கொள்ள மாட்​டார்​கள் என தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா தெரி​வித்​தார்.

தேமு​திக நிறு​வனத் தலை​வர் விஜய​காந்​தின் 73-வது பிறந்​த​நாள் இன்று கொண்​டாடப்பட உள்ள நிலை​யில், கட்சி தலைமை அலு​வல​கத்​தில் நேற்று மருத்​துவ முகாம், ரத்​த​தான முகாமை கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா தொடங்கி வைத்​தார்.

அதைத்​தொடர்ந்து தள்​ளுவண்​டி, அயன் பாக்​ஸ், தையல் இயந்​திரம் மற்​றும் மாற்​றுத் திற​னாளி​களுக்கு மூன்று சக்கர நாற்​காலிகள், மாணவ மாணவி​களுக்கு கல்வி உதவித்​தொகை உள்​ளிட்ட நலத்​திட்ட உதவி​களை வழங்​கி​னார்.

ராமாபுரம் எம்​ஜிஆர் காது கேளாதோர் பள்​ளிக்கு மதிய உணவு மற்​றும் நிதி​யுத​வி​யாக ரூ.50 ஆயிரம், டெல்லி தமிழ் சங்​கத்​துக்கு கல்விக்​காக ரூ.1 லட்​சம் காசோலை வழங்​கப்​பட்​டது. தொடர்ந்து கேப்​டன் முரசு புத்​தகத்​தை​யும் பிரேமலதா வெளி​யிட்​டார். அதன் தொடர்ச்​சி​யாக பொது​மக்​களுக்கு அன்​ன​தானம் வழங்​கி​னார். பின்​னர் செய்தியாளர்​களிடம் பிரேமலதா கூறிய​தாவது:

முதல்​கட்ட சுற்​றுப்​பயணத்தை வெற்​றிகர​மாக முடித்​துள்​ளோம். மக்​களிடையே அன்​பும் ஆரவார​மும் கிடைத்​தது. தூய்மை பணியாளர்​கள் உயிரை பணயம் வைத்​து​தான் பணி செய்​கிறார்​கள். தூய்மை பணி​யாளர்​கள் பணிநிரந்​தரம், பழைய ஊதி​யம் கோரி ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர். ஆனால் அரசு வீடு தரு​கிறோம், கல்வி உதவித்​தொகை தரு​கிறோம், காலை உணவு தருகிறோம் என்று அறி​வித்​துள்​ளனர். தூய்மை பணி​யாளர்​கள் நன்றி சொல்​வது போல் செய்​தி​கள் போட்டு ஒரு மாயையை தான் உரு​வாக்கி உள்​ளனர்.

விஜய் சின்ன பைய​னாக இருக்​கும்​போது இருந்தே விஜய​காந்த் அவரை பார்த்து வந்​துள்​ளார். எப்​போதும் விஜய் எங்களுடைய பையன்​தான். விஜய​காந்த் வாக்​கு​களை பிடிக்க விஜய் அவரை பயன்​படுத்​துகிறார் என்​றால், அப்​படி எது​வும் நடக்​காது. ஏனென்றால் எங்​களுக்கு என்று ஒரு கட்சி உள்​ளது.

எங்​கள் கட்சி 20 ஆண்டு கட்​சி, எதிர்க்​கட்​சி​யாக​வும் இருந்​துள்​ளது. விஜய​காந்த் இடத்தை யாராலும் பிடிக்க முடி​யாது. விஜய​காந்த் பெயரை சொல்லி ​விஜய் வாக்​கு​களை எடுக்​கிறார் என்​றால் மக்​கள் அதை ஏற்​று​கொள்ள மாட்​டார்​கள். இவ்​வாறு அவர் கூறி​னார்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in