யார் வேண்டுமானாலும் மாநாடு நடத்தட்டும்... தமிழக மக்களின் ஆதரவு பாஜகவுக்கு தான்: அண்ணாமலை திட்டவட்டம்

சென்னை தி.நகரில் உள்ள இல.கணேசனின் வீட்டுக்கு சென்று அவரது படத்துக்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சென்னை தி.நகரில் உள்ள இல.கணேசனின் வீட்டுக்கு சென்று அவரது படத்துக்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Updated on
1 min read

சென்னை: நாகாலாந்து ஆளுந​ராக இருந்த மறைந்த இல.கணேசனின் தி.நகரில் உள்ள வீட்​டுக்கு பாஜக முன்​னாள் மாநில தலை​வர் அண்​ணா​மலை நேற்று சென்று, குடும்​பத்​தினரை சந்​தித்து ஆறு​தல் தெரி​வித்​தார். பின்​னர், இன்​று (21-ம் தேதி) நடை​பெறும் இல.கணேசனின் புகழஞ்​சலி நிகழ்​வுக்கு குடும்​பத்​தினருக்கு நேரில் அழைப்பு விடுத்​தார்.

அப்​போது செய்​தி​யாளர்​களிடம் அண்​ணா​மலை கூறிய​தாவது: இல.கணேசன் மறைவு என்​பது பெரும் இழப்​பு. நான் கட்சி நிகழ்ச்சி காரண​மாக வேறொரு ஊரில் இருந்​த​தால், என்​னால், இல.கணேசனின் இறுதி நிகழ்​வில் கலந்து கொள்​ள​முடிய​வில்​லை. சி.பி.​ரா​தாகிருஷ்ணன் குடியரசு துணை தலை​வர் தேர்​தலில் வெற்றி பெற்று அந்த இருக்​கைக்கு பெருமை சேர்ப்​பார்.

கட்சி பாகு​பாடின்றி திமுக மற்​றும் இண்​டியா கூட்​டணி கட்​சிகள் அவருக்கு ஆதரவு அளிப்​பார்​கள் என்ற நம்​பிக்கை இருக்​கிறது. தமிழகத்​தில் எல்​லோரும் மாநாடு நடத்த உரிமை இருக்​கிறது. தமிழக வெற்​றிக் கழக​மும் மாநாடு நடத்​தட்​டும். மக்களின் ஆதரவு பாஜகவுக்குதான்.

திமுக​வுக்கு மாற்று தேசிய ஜனநாயக கூட்​டணி தான். திமுக ஆட்​சி​யில் இருந்து இறங்​கிய பிறகு, தேசிய ஜனநாயக கூட்​டணி ஆட்​சி​யில் அமரும் என மக்​கள் பேச தொடங்கிவிட்​டார்​கள். இவ்​வாறு அவர் கூறி​னார். பாஜக மாநில துணை தலை​வர்​கள் கரு.​நாக​ராஜன், டால்பின் தர், மாநில செய​லா​ளர்கள் கராத்தே தி​யாக​ராஜன், சுமதி வெங்​கடேசன் உடன்​ இருந்​தனர்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in