Published : 06 Jul 2018 07:52 AM
Last Updated : 06 Jul 2018 07:52 AM

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை ஆணையத்தின் அதிகார வரம்பு விரிவாக்கம்: மே 22-க்கு பிறந்த நிகழ்வுகளையும் விசாரிக்கும்

தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பத ாவது:

தூத்துக்குடியில் கடந்த மே 22-ம் தேதி நடந்த காவல் துறை துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. இந்த ஆணையத்தின் ஆய்வு வரம்பானது, மே 22-ம் தேதி நடந்த துப்பாக்கிச்சூட்டுக்கான காரணங்கள், அதற்கான சூழ்நிலைகள், இறப்புகள், பொதுச் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து விசாரணை செய்வதா கும்.

தற்போது மே 22-ம் தேதிக்கு பிறகு தூத்துக்குடியிலும், அதன் சுற்றுவட்டார பகுதியிலும் நடந்த சம்பவங்களையும் சேர்த்து விசாரணை செய்வதற்கு ஆணையத்தின் அதிகார வரம்பு விரிவுபடுத்தப்படுகிறது. அதனால் பொதுமக்கள், பாதிக்கப்பட்டோர் மே 22-ம் தேதி நடந்த சம்பவம், அதன்பிறகு நிகழ்ந்த சம்பவங்கள் தொடர்பாக ஆணையத்துக்கு ஜூலை 27-ம் தேதிக்குள் தெரியப்படுத்தலாம்.

உறுதிமொழி பத்திரங்களை (ஒரு அசல், இரு நகல்), ‘அரசு மாளிகை எண் என்.சி.பி.28, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை (கிரீன்வேஸ் சாலை), சென்னை- 28’ என்ற முகவரிக்கு அல்லது ‘அரசு பழைய சுற்றுலா மாளிகை, தெற்கு கடற்கரை சாலை, தூத்துக்குடி- 628 001’ என்ற முகவரிக்கு நேரிடையாகவோ, அஞ்சல் மூலமாகவோ அளிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x