தமிழகத்தில் போதைப் பொருளால் இளைஞர்கள் சீரழிகின்றனர்: பழனிசாமி குற்றச்சாட்டு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
Updated on
1 min read

கலசப்பாக்கம்: ‘தமிழகத்தில் போதைப் பொருட் கள் புழக்கத்தால் இளைஞர்கள் சீரழிகின்றனர்’ என்று அதிமுக பொதுச் செயலாளர் பனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பிரச்சார பேரணி மூலமாக மக்களை சந்தித்து வருகிறார்.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம் அதிமுக தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட கலசப்பாக்கம் சட்டப்பேரவை தொகுதியில் வில்வாரணி நட்சத்திர கோயில் பகுதியில் நேற்று பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது: திமுக கூட்டணி வலுவானது என்பதால் தேர்தலில் வெற்றி பெறுவோம் என ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார். அதிமுக கூட்டணிக்கு இன்னும் பல கட்சிகள் வருகின்றன. மக்கள்தான் எஜமானர்கள், தீர்மானிக்கும் அதிகாரம் படைத்தவர்கள். தமிழகத்தில் அதிமுக ஆட்சியையும் திமுக ஆட்சியையும் ஒப்பிட்டு, எது சிறந்தது என முடிவுசெய்து 2026 சட்டப்பேரவை தேர்தலில் முடிவை வழங்குங்கள்.

வாக்குறுதிகள் நிறைவேறவில்லை: 525 அறிவிப்புகளில் 10 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. முழு பூசணியை சோற்றில் மறைக்கிறார். நீட் தேர்வு ரத்து செய்யவில்லை, ரகசியமும் சொல்ல வில்லை. அப்படி என்றால் பொய் சொல்லித்தானே ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் போதைப் பொருள் சகஜமாகிவிட்டது. இளைஞர்கள் சீரழிவதால் குடும்பங்கள் அழிகின்றன. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதற்கு வரக்கூடிய தேர்தலில் அதிமுக கூட்டணி வெல்ல வேண்டும்.

எல்லா துறையிலும் ஊழல் நடக்கிறது. பணம் கொடுக்காமல் எதுவும் நடக்காது. டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக பெறுவதால் வருடத்துக்கு ரூ.5,400 கோடியும், நான்காண்டுகளில் 22 ஆயிரம் கோடி ரூபாய் மேலிடம் போகின்றது. அப்படிப்பட்ட ஆட்சி தொடர வேண்டுமா..? என்றார்.

சுவாமி தரிசனம்: முன்​ன​தாக, திரு​வண்​ணா​மலை அண்ணாமலை​யார் கோயி​லில் அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி நேற்று காலை சுவாமி தரிசனம் செய்​தார். அவருக்கு சிவாச்​சா​ரி​யார்​கள் பிர​சாதம் வழங்​கினர். பின்​னர், செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறும்​போது, ‘‘தமிழகத்​தைச்சேர்ந்​த சி.பி.​ரா​தாகிருஷ்ணனை குடியரசு துணைத் தலைவராக தேர்வு செய்​வது தமிழ்​நாட்​டுக்கு பெரு​மை.

கட்சி பேதமின்றி தமிழ்​நாட்​டில் உள்ள அனைத்து மக்​களவை உறுப்​பினர்​களும் அவரை வெற்​றி​பெறச் செய்ய ஆதரவு அளிக்க வேண்​டும்” என்​றார். முன்​னாள் அமைச்​சர்​களும், மாவட்ட செய​லா​ளர்​களு​மான அக்ரி எஸ்​.எஸ்.கிருஷ்ண​மூர்த்​தி, சேவூர் எஸ்​.​ராமச்​சந்​திரன் உள்​ளிட்ட பலர் உடனிருந்​தனர்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in