அவதூறுகளைப் பரப்பி தமிழகத்தின் மொழி, இன உணர்வை அணையாமல் பார்த்துக் கொள்கிறார் ஆளுநர்: முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை தொடக்க வேளாண் கடன் சங்க வளாகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் இணையவழியில் பயிர்க்கடனுக்கு விண்ணப்பிக்கும் திட்டத்தை தொடங்கிவைத்து, பயனாளிக்கு கடன் தொகையை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன், அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பெரியகருப்பன், எ.வ.வேலு, ராஜேந்திரன் உள்ளிட்டோர்.
தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை தொடக்க வேளாண் கடன் சங்க வளாகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் இணையவழியில் பயிர்க்கடனுக்கு விண்ணப்பிக்கும் திட்டத்தை தொடங்கிவைத்து, பயனாளிக்கு கடன் தொகையை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன், அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பெரியகருப்பன், எ.வ.வேலு, ராஜேந்திரன் உள்ளிட்டோர்.
Updated on
2 min read

தருமபுரி: தொடர்ந்து அவதூறுகளைப் பரப்பி தமிழகத்​தின் மொழி, இன உணர்​வு​களை அணை​யாமல் பார்த்​துக் கொள்​கிறார் ஆளுநர் ஆர்​.என்​.ரவி என்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் கூறி​னார். தரு​மபுரி அடுத்த தடங்​கம் ஊராட்​சி​யில் நேற்று நடை​பெற்ற விழா​வில், ரூ.363 கோடி​யில் முடிவுற்ற 1,073 திட்​டங்​களை திறந்​து​வைத்த முதல்​வர் ஸ்டா​லின், ரூ.513 கோடி​யில் 1,044 பணி​களுக்கு அடிக்​கல் நாட்டி வைத்​தார். மேலும், 70,427 பயனாளி​களுக்கு ரூ.830 கோடி மதிப்​பிலான நலத்​திட்ட உதவி​களை வழங்​கி​னார்.

விழா​வில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பேசி​ய​தாவது: ஒகேனக்​கல் கூட்​டுக் குடிநீர் திட்​டம் உள்​ளிட்ட ஏராள​மான திட்​டங்​களை தரு​மபுரிக்கு தந்​தது திமுக அரசு தான். கடந்த 4 ஆண்​டு​களில் மட்​டும் ரூ.447 கோடி​யில் 43.86 லட்​சம் பயனாளி​களுக்கு நலத் திட்​டங்​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன.

இவ்​வாறு மக்​களின் நலனுக்​காக பல்​வேறு திட்​டங்​களை செயல்​படுத்தி வரும் திமுக அரசு குறித்து சிலர் வதந்தி பரப்பி வரு​கின்​றனர். திமுக தேர்​தல் வாக்​குறு​திபடி ஆட்​சிப் பொறுப்​பேற்ற முதல் நாளி​லேயே விடியல் பயணம் திட்​டத்​துக்கு கையெழுத்​திட்​டேன். தற்​போது கர்​நாட​கா, ஆந்​திர மாநிலங்​களி​லும் இத்​திட்​டத்தை நடை​முறைப்​படுத்தி வரு​கின்​றனர்.

வளர்ச்​சித் திட்​டங்​களுக்கு முன்​னோடி​யாக​வும், இந்​தி​யா​வுக்கே திசை​காட்​டி​யாக​வும் திரா​விட மாடல் அரசு உள்​ளது. இதை பொறுக்க முடி​யாமல்​தான் ஆட்​சிக்கு எதி​ராக சில விஷமிகள் அவதூறுகளை அள்ளி வீசுகின்​றனர்.

எதிர்க்​கட்​சிகளை​விட மலி​வான அரசி​யல் செய்​கிறார் ஆளுநர் ரவி. திமுக ஆட்சி மீது அவதூறு பரப்​புவது, திரா​விடத்தை பழிப்​பது, சட்​டங்​களுக்கு ஒப்​புதல் தர மறுப்​பது, தமிழ்த்​தாய் வாழ்த்தை அவம​திப்​பது, தமிழக மாணவர்​களை இழி​வுபடுத்​து​வது, கல்​வி, சட்​டம்​-ஒழுங்​கு, பெண்​கள் பாது​காப்பு குறித்​தெல்​லாம் உண்​மைக்​குப் புறம்​பான தகவல்​களைக் கூறி பீதியை கிளப்​பும் செயல்​களில் தொடர்ந்து ஈடு​பட்டு வரு​கிறார்.

தலைசிறந்த மாநிலம்... ஆனால், இந்​தி​யா​விலேயே தமிழகம் தலைசிறந்த மாநில​மாக உள்​ள​தாக மத்​திய அரசின் புள்​ளி ​விவரங்​கள் குறிப்​பிடு​கின்​றன. பள்​ளிக் கல்​வி​யில் நாட்​டிலேயே தமிழகம் 2-வது இடத்தை பிடித்​துள்​ளது. கடந்த 4 ஆண்​டு​களில் ரூ.10 லட்​சம் கோடி முதலீடு​களை ஈர்த்​துள்​ளோம். தேசிய குற்ற ஆவணக் காப்​பகத்​தின் அறிக்​கைபடி, பாஜக ஆளும் உத்தர பிரதேச மாநிலத்​தில்​தான் பெண்​களுக்கு எதி​ரான குற்​றங்​கள் அதி​கம் நடக்​கின்​றன.

ஆளுநர் மூலம் மத்​திய பாஜக அரசு இழி​வான அரசி​யல் செய்து வரு​கிறது. எனினும், ஆளுநர் ரவி தமிழகத்​தில்​தான் இருக்க வேண்​டும் என்​பது என் விருப்​பம். அவரால்​தான் தமிழகத்​தில் மொழி, இன உணர்வு மற்​றும் திரா​விட இயக்​கக் கொள்கை உணர்வு பட்​டுப் போகாமல் உள்​ளது. இந்த கொள்கை நெருப்பை அணை​ய​விட​மால் பார்த்​துக் கொள்​ளும் வேலையை ஆளுநர் ரவி சிறப்​பாக செய்து வரு​கிறார்.

எனவே, அடுத்​தும் திமுக ஆட்​சி​தான் அமை​யும். நாட்​டிலேயே அனைத்​துத் துறை​யிலும் வளர்ந்த மாநில​மாக தமிழகத்தை உயர்த்​து​வோம். இவ்​வாறு முதல்​வர் பேசி​னார். நிகழ்ச்​சி​யில், அமைச்​சர்​கள் எம்​.ஆர்​.கே.பன்​னீர்​செல்​வம், பெரியகருப்​பன், எ.வ.வேலு, ராஜேந்​திரன் மற்​றும் எம்​.பி. எம்​எல்​ஏ-க்​கள், அரசு உயர​தி​காரி​கள் உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​டனர்.

இணைய வழி​யில் பயிர்க்கடன்: முன்​ன​தாக, அதி​ய​மான்​கோட்டை தொடக்க வேளாண்மை கூட்​டுறவு கடன் சங்க வளாகத்​தில் நடந்த விழா​வில், இணைய வழி​யில் பயிர்க் கடன் வழங்​கும் திட்​டத்தை முதல்​வர் ஸ்டா​லின் தொடங்​கி​வைத்​தார். அவர் பேசும்​போது, “இது நாட்​டிலேயே முன்​னோடித் திட்​ட​மாகும். இனி வீட்​டில் இருந்​த​படியே ஆன்​லைன் மூலம் பயிர்க்​கட​னுக்கு விண்​ணப்​பித்​து, அன்றே வங்​கிக் கணக்​கில் கடன்​தொகை​யைப் பெற்று விவ​சா​யிகள் பயனடைய​லாம்” என்​றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in