நெல்லையில் ஆக. 22-ல் பாஜக பூத் கமிட்டி மாநாடு: அமித் ஷா பங்கேற்பு

நெல்லையில் ஆக. 22-ல் பாஜக பூத் கமிட்டி மாநாடு: அமித் ஷா பங்கேற்பு
Updated on
1 min read

சென்னை: நெல்​லை​யில் வரும் 22-ம் தேதி நடை​பெறும் பாஜக பூத் கமிட்டி மாநாட்​டில் அமித் ஷா பங்​கேற்​ப​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

தமிழக பாஜக சார்​பில் தென் மாவட்​டங்​களில் உள்ள பாஜகபூத் கமிட்டி பொறுப்​பாளர்​கள் மாநாடு ஆக. 17-ம் தேதி (இன்​று) நெல்​லை​யில் நடை​பெறும் என அறிவிக்​கபட்​டிருந்​தது. இந்​நிலை​யில், பாஜக மூத்த தலை​வரும், நாகாலாந்து ஆளுநரு​மான இல.கணேசன் நேற்று முன்​தினம் மாலை கால​மா​னார்.

இதையடுத்​து, நெல்​லை​யில் நடை​பெற​விருந்த பூத் கமிட்டி மாநாடு ரத்து செய்​யப்​பட்​டு, வரும் 22-ம் தேதிக்கு தள்​ளிவைக்​கப்​பட்​டுள்​ளது. வரும் 22-ம் தேதி நெல்​லை​யில் நடை​பெறும் மாநாட்​டில் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷாவும் பங்​கேற்​ப​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது.

அன்று கேரளா​வில் நிகழ்ச்​சி​யில் பங்​கேற்க வரும் அமித் ஷா, அங்​கிருந்து நெல்லை வந்து மாநாட்​டில் கலந்து கொள்​கிறார். அப்​போது, தமிழக பாஜக தலை​வர்​களு​டன் கூட்​டணி தொடர்​பான ஆலோ​சனை​களை அவர் மேற்​கொள்ள உள்​ளார் என்று பாஜக மூத்த நிர்​வாகி ஒரு​வர் தெரி​வித்​தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in