நேர்மையான முறையில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியை உறுதி செய்ய வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

சேலத்​தில் நேற்று நடை​பெற்ற இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில மாநாட்​டில் பேசி​னார் முதல்​வர் மு.க ஸ்டா​லின். உடன், கட்சியின் தேசிய பொதுச் செய​லா​ளர் டி.​ராஜா, மாநிலச் செயலாளர் முத்​தரசன், காங்​கிரஸ் மாநிலத் தலை​வர் கு.செல்​வப்​பெருந்​தகை, மார்க்​சிஸ்ட்​ கம்​யூனிஸ்ட்​ மாநிலச்​ செய​லா​ளர்​ சண்​முகம்​ உள்​ளிட்​டோர்​. படம்​: எஸ்​.குரு பிர​சாத்
சேலத்​தில் நேற்று நடை​பெற்ற இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில மாநாட்​டில் பேசி​னார் முதல்​வர் மு.க ஸ்டா​லின். உடன், கட்சியின் தேசிய பொதுச் செய​லா​ளர் டி.​ராஜா, மாநிலச் செயலாளர் முத்​தரசன், காங்​கிரஸ் மாநிலத் தலை​வர் கு.செல்​வப்​பெருந்​தகை, மார்க்​சிஸ்ட்​ கம்​யூனிஸ்ட்​ மாநிலச்​ செய​லா​ளர்​ சண்​முகம்​ உள்​ளிட்​டோர்​. படம்​: எஸ்​.குரு பிர​சாத்
Updated on
1 min read

சேலம்: தமிழகம் உள்பட மாநிலங்​களில் நேர்​மை​யான முறை​யில் வாக்​காளர் பட்​டியல் சரி​பார்ப்பு பணியை தேர்​தல் ஆணை​யம் உறுதி செய்ய வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் கூறி​னார்.

சேலத்​தில் நடை​பெற்ற இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில மாநாட்​டில் பங்​கேற்ற முதல்​வர் ஸ்டா​லின் பேசி​ய​தாவது: எல்​லோருக்​கும் எல்​லாம் என்ற லட்​சி​யத்​துடன், திரா​விட இயக்​கங்​களோடு கம்​யூனிஸ்ட்​கள் கொள்கை உறவு கொண்​டுள்​ளன. இந்த உறவு எப்​போதும் நீடிக்க வேண்​டும். அப்​போது​தான் தலை​முறை​கள் காப்​பாற்​றப்​படும்.

1950-ல் சேலம் சிறை​யில் 22 கைதி​கள் சுட்​டுக் கொல்​லப்​பட்​டனர். அந்த நாளை கண்டன நாளாக அறி​வித்த பெரி​யார், ஊர்​வலங்​களை நடத்​தி​னார். கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் கோரிக்​கையை ஏற்று அங்கு மணி மண்​டபம் அமைக்​கப்​படும்.திமுக தோழமைக் கட்​சிகளின் ஒற்​றுமை பலரின் கண்​களை உறுத்​துகிறது. கூட்​ட​ணியை உடைக்க எத்​தனையோ சதி செய்​து, பொய் தகவல்​களை பரப்​பு​கின்​றனர். அதில் முக்​கிய​மானவர் எதிர்க்​கட்​சித் தலை​வர் பழனி​சாமி. அவருக்கு கம்​யூனிஸ்ட் கட்​சிகளின் மேல் திடீர் பாசம் பொங்​கு​கிறது. அடிமைத்​தனம் பற்றி பழனி​சாமி பேசலா​மா?

எங்​களைப் பொறுத்​தவரை யாரும், யாருக்​கும் அடிமை இல்​லை. எங்​களது இயக்​கம் அடிமைத் தனத்​துக்கு எதி​ரானது. அந்​தக் கொள்கை தெரி​யாமல் பழனி​சாமி கொச்​சைப்​படுத்தி பேசுகிறார். கூட்​ட​ணி​யில் இருந்​தா​லும்நியாய​மான கோரிக்​கைகளை முன்​வைக்க கம்​யூனிஸ்ட்​கள் தவறு​வ​தில்​லை. நாங்​களும் அந்​தக் கோரிக்​கைகளை நிறைவேற்​றிக் கொண்​டு​தான் வரு​கிறோம்.

ஜனநாயகத்​துக்கு அடிப்​படை​யான தேர்​தல் ஆணை​யத்தை பாஜக தனது கிளை அமைப்​பாக மாற்​றி​விட்​டது. தேர்​தல் ஆணை​யர்​கள் நியமனத்​தில்​தான் சதி செய்​கிறார்​கள் என்​றால், வாக்​காளர் பட்​டியலிலும் சதி செய்​துள்​ளனர். மக்​களாட்​சி​யைப் பாது​காக்க, இந்த சதித் திட்​டத்தை அம்​பலப்​படுத்​திய ராகுல் காந்​திக்கு எனது பாராட்​டு​கள். தமிழகம் உள்​ளிட்ட மாநிலங்​களில் தேர்​தல் நடை​முறை​கள் தொடங்​கு​வதற்கு முன்​பாக, சுதந்​திர​மான, நேர்​மை​யான முறை​யில் வாக்​காளர் பட்​டியல் சரி​பார்ப்பு பணியை தேர்​தல் ஆணை​யம் உறுதி செய்ய வேண்​டும்.

2021 போல 2026 தேர்​தலிலும் எங்​களது வெற்றி தொடரும். திரா​விட மாடல் 2.0 ஆட்சி உரு​வாகும். இதற்கு கம்​யூனிஸ்ட் தோழர்​களும் உடனிருக்க வேண்​டும். இவ்​வாறு முதல்​வர் ஸ்டாலின் பேசி​னார்.

பாஜகவுக்கு கண்டனம்: ​பாசிச கொள்​கைகளு​டன், தொழிலா​ளர்​கள், விவ​சா​யிகள், மாணவர்​கள் என அனைத்​துத் தரப்​பினருக்​கும் எதி​ரான திட்​டங்​களை செயல்​படுத்தி வரும் மத்​திய பாஜக அரசுக்கு இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி கடும் கண்​டனம் தெரிவிக்​கிறது.திமுக கூட்​ட​ணியை உடைக்க பாஜக மேற்​கொள்​ளும் முயற்​சிகள் பலிக்​காது. திமுக தலை​மையி​லான மதச் சார்​பற்ற முற்​போக்​குக் கூட்​டணி வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பெரும் வெற்றி பெற பாடு​படு​வது உள்​ளிட்ட தீர்​மானங்​கள் மா​நாட்​டில்​ நிறைவேற்​றப்​பட்​டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in