Published : 26 Jul 2018 06:17 PM
Last Updated : 26 Jul 2018 06:17 PM

போர்க்கால அடிப்படையில் நீர் மேலாண்மை செயல்திட்டம் வகுக்கப்பட வேண்டும்: சரத்குமார்

போர்க்கால அடிப்படையில் நீர் மேலாண்மை செயல்திட்டம் வகுக்கப்பட வேண்டும் என, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக சரத்குமார் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “வறட்சி காலத்தில் நீருக்காகப் போராடுகின்றோம். ஆனால், இயற்கையின் கொடையாய் அளிக்கப்பட்ட நீரை உபரி நீராக கடலில் கலக்க விடுகின்றோம். நீர் மேலாண்மையின் முக்கியத்துவம் உணர்ந்து முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுதல் அவசியம்.

ஏரிகள், குளங்களைப் புனரமைத்து முறையாக பராமரித்திட புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும். போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தப்படும் திட்டம் நிரந்தரத் தீர்வாக நீண்டநாள் பலனளிக்கும் வகையில் அமைதல் வேண்டும். மேலும் வறட்சி காலத்தில் நீர் தேவையை பூர்த்திசெய்யும் வகையிலும், வெள்ளக்காலத்தில் நீர்தேக்கி பயனளிக்கும் வகையிலும் அத்திட்டம் அமையவேண்டும்” என சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x