மலேசியா - கேரளா விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால் சென்னையில் தரையிறக்கம்

மலேசியா - கேரளா விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால் சென்னையில் தரையிறக்கம்
Updated on
1 min read

சென்னை: மலேசி​யா​வில் இருந்து கேரளா சென்று கொண்​டிருந்த பயணி​கள் விமானத்​தில் இயந்​திரக் கோளாறு ஏற்​பட்​ட​தால் சென்​னை​யில் தரை​யிறக்​கப்​பட்​டது. மலேசியா தலைநகர் கோலாலம்​பூரில் இருந்து நேற்று முன்​தினம் 158 பயணி​கள், 8 விமான ஊழியர்​கள் என 166 பேருடன் கேரள மாநிலம் கோழிக்​கோட்​டுக்கு ஏர் ஏசியா விமானம் புறப்​பட்​டது.

நள்​ளிரவு 11.50 மணிக்கு சென்னை வான்​வெளி​யில் விமானம் பறந்து சென்று கொண்​டிருந்த போது, விமானத்​தில் திடீரென்று இயந்திரக் கோளாறு ஏற்​பட்​டுள்​ளதை விமானி கண்​டு​பிடித்​தார்.

இதையடுத்​து, சென்னை விமான நிலைய கட்​டுப்​பாட்டு அறையை தொடர்பு கொண்ட விமானி, தகவலைத் தெரி​வித்து விமானத்தை சென்​னை​யில் தரை​யிறக்க அனு​மதி கேட்​டார். கட்​டுப்​பாட்டு அதி​காரி​கள் அனு​மதி கொடுத்​தனர். தொடர்ந்​து, விமானம் அவசர​மாக தரை​யிறங்​கு​வதற்​கான அனைத்து பாது​காப்பு ஏற்​பாடு​களும் செய்​யப்​பட்​டன.

இதையடுத்​து, நள்​ளிரவு 12.10 மணிக்கு சென்​னை​யில் விமானம் தரை​யிறக்​கப்​பட்​டது. விமானத்​திலிருந்து பயணி​கள் கீழே இறக்கப்பட்​டு, சென்னை விமான நிலைய ஓய்வு அறை​களில் தங்க வைக்​கப்​பட்​டனர். பொறி​யாளர்​கள் குழு​வினர் விமானத்​தில் ஏற்பட்ட பழுதை சரி செய்​தனர். நேற்று மாலை​யில் விமானம் சென்​னையி​லிருந்து கோழிக்​கோட்​டுக்கு புறப்​பட்டு சென்​றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in