வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறியை தனி நெறியாக அறிவிக்க அதிகாரிகளை அணுகலாம்: கோர்ட் உத்தரவு

வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறியை தனி நெறியாக அறிவிக்க அதிகாரிகளை அணுகலாம்: கோர்ட் உத்தரவு
Updated on
1 min read

மதுரை: வள்​ளலாரின் சுத்த சன்​மார்க்க நெறியை தனி நெறி​யாக அறி​விப்​பது தொடர்​பாக உயர்​மட்​டக் குழு அமைக்க உரிய அதிகாரி​களை அணுகு​மாறு உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

மதுரை உத்​தங்​குடியைச் சேர்ந்த ராமலட்​சுமி, உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: வள்ளலாரின் சுத்த சன்​மார்க்க நெறியை தனி நெறி​யாக​வும், புதிய மார்க்​க​மாக​வும் அறிவிக்​கும் கோரிக்​கை​யைப் பரிசீலிக்க வேண்​டும் என தமிழக அரசுக்கு நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது.

இது தொடர்​பான கருத்​துகள் பெற உயர்​மட்​டக் குழு அமைக்​கப்​படும் என தமிழக அரசு 2019 ஜூலை 31-ல் அறி​வித்​தது. ஆனால் இதுவரை உயர்​மட்​டக் குழு அமைக்​க​வில்​லை.

எனவே, வள்​ளலாரின் சுத்த சன்​மார்க்க நெறியை தனி நெறி​யாக​வும், புதிய மார்க்​க​மாக​வும் அறி​விப்​பது தொடர்​பான கருத்துரைகளை பெற உடனடி​யாக உயர்​மட்​டக் குழுவை அமைக்க உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது. இந்த மனு நீதிப​தி​கள் எஸ்​.எம்​. சுப்​பிரமணி​யம், ஜி.அருள்​முரு​கன் அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது.

அறநிலை​யத் துறை சார்​பில், “உயர்​மட்​டக் குழு அமைப்​பது தொடர்​பாக அறநிலை​யத் துறை இணை ஆணை​யர் பரிந்​துரை செய்துள்​ளார். இந்​தப் பரிந்​துரையை ஆணை​யர் நிராகரித்​துள்​ளார்” எனத் தெரிவிக்​கப்​பட்டது.

இதையடுத்து நீதிப​தி​கள், “உயர் மட்டக் குழு பரிந்​துரையை அறநிலை​யத் துறை ஆணை​யர் நிராகரித்​துள்​ளார். இதனால் மனு​தா​ரர் நிவாரணம் பெற சம்​பந்​தப்​பட்ட அதி​காரி​களை அணுகலாம். மனு முடிக்​கப்​படு​கிறது” என்று உத்​தர​விட்​டனர்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in