தாம்பரத்தில் பட்டா கேட்டு மார்க்சிஸ்ட் போராட்டம்: மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பங்கேற்பு

தாம்பரத்தில் பட்டா கேட்டு மார்க்சிஸ்ட் போராட்டம்: மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பங்கேற்பு
Updated on
1 min read

தாம்பரம்: ​தாம்​பரம் மாநக​ராட்​சிக்கு உட்​பட்ட ராஜீவ் காந்தி நகர், திரு​மங்​கை​யாழ்​வார் நகர், தாங்​கல் உள்​ளிட்ட பகுதி மக்களுக்கு குடிமனைப் பட்டா வழங்க கோரி நேற்று தாம்​பரம் கோட்​டாட்​சி​யர் அலு​வல​கம் முன்பு ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது.

தாம்​பரம் ராஜீவ்​காந்தி நகரில் உள்ள 102 குடும்​பங்​கள், திருநீர்​மலை 31-வது வார்டு திரு​மங்​கை​யாழ்​வார்​புரம், சர்வே எண் 234/2, 272 ஆகிய​வற்​றில் உள்ள குடி​யிருப்​பு​கள், பொழிச்​சலூர் ஞானமணி நகர் சர்வே எண் 288/2ல் மறு குடியமர்வு செய்​யப்​பட்ட 98 குடும்பங்கள், திரிசூலம் ஊராட்​சி​யில் வசிக்​கும் மக்​கள் ஆகியோருக்கு குடிமனைப் பட்டா வழங்க கோரி மனு கொடுக்​கும் ஆர்ப்பாட்​டம் நடை​பெற்​றது.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம் கூறிய​தாவது: ஒரு​புறம் அரசு பட்டா கொடுத்து வருகிறது. மறு​புறம், தமிழகம் முழு​வதும் பட்டா கேட்டு மீண்​டும் மீண்​டும் மக்​கள் மனு கொடுத்து வரு​கின்​றனர்.

அதி​காரி​களின் அலட்​சி​யம், வரு​வாய்த் துறை ஆவணங்​களில் காலத்​துக்​கேற்ப மாற்​றங்​கள் செய்​யாததே இதற்கு காரணம். வரு​வாய்த் துறை நில நிர்​வாக ஆணை​யரும், ஆட்​சி​யரும் இதில் கவனம் செலுத்த வேண்​டும். பட்டா வழங்​கு​வ​தில் உள்ள பிரச்​சினையை ஆராய்ந்து வரு​வாய்த் துறை பணி​களை விரைவுபடுத்த வேண்​டும்.

தாம்​பரம் அண்​மை​யில்​தான் மாநக​ராட்​சி​யாக மாறியது. ஆனால், பட்டா கோரும் மக்​கள் 50, 60 ஆண்​டு​களாக வாழ்ந்து வருகின்றனர். ஏற்​கெனவே உள்ள இடத்​துக்கு பட்டா தர முடி​யாது. பழைய அரசாணை​களை காட்​டி, ஒரு சென்ட் பட்டா மட்​டுமே வழங்​கப்​படும் என்று அதி​காரி​கள் கூறுகின்​றனர். எனவே, மக்​கள் குடியேறிய காலத்தை வைத்து பட்டா வழங்​கும் அளவை தீர்​மானிக்க வேண்​டும்.

மாறாக, தற்​போதைய சூழலுக்கு ஏற்ப தீர்​மானிப்​பதை சிபிஎம் ஏற்​க​வில்​லை. இதை வரு​வாய்த் துறை பரிசீலிக்க வேண்​டும். ராஜீவ் காந்தி நகர் வன நிலம் என்று ஆவணத்​தில் உள்​ளது. ஆனால், 100 ஆண்​டு​களுக்கு மேலாக மக்​கள் வசிக்​கின்​றனர். அந்த இடத்​துக்கு மாற்று இடம் தரப்​பட்​டு​விட்​டது. ஆட்​சி​யரும் பட்டா வழங்க உத்​தர​விட்​டுள்​ளார். அதன் பிறகும் பட்டா வழங்​காமல் இழுத்​தடித்து வரு​கின்​றனர்.

புறவழிச்​சாலை அமைப்​ப​தற்​காக அங்​கிருந்து அகற்​றப்​பட்​ட​வர்​கள் 1998-ம் ஆண்டு பொழிச்​சலூரில் ஆட்​சி​ய​ரால் குடியமர்த்தப்பட்டனர். இவர்​களுக்​கும் பட்டா மறுக்​கப்​பட்டு வரு​கிறது. மக்​களின் பக்​கம் நின்று பிரச்​சினையை அணு​கா​விட்​டால் ஆட்​சிக்கு அவப்​பெயரை ஏற்​படுத்​தும். பட்டா கோரிய மனுக்​கள் மீது விரைந்து தீர்வு காண வேண்​டும் என்றார். இதன் பின்​னர் வரு​வாய் கோட்​டாட்​சி​யர் அலு​வல​கத்​தில் மனு அளிக்கப்பட்டது​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in