தூய்மைப் பணியாளர்கள் வழக்கில் நடந்த வாதமும், உயர் நீதிமன்ற உத்தரவும் - ஒரு பார்வை

தூய்மைப் பணியாளர்கள் வழக்கில் நடந்த வாதமும், உயர் நீதிமன்ற உத்தரவும் - ஒரு பார்வை
Updated on
2 min read

சென்னை: ​போ​ராட்​டம் என்ற பெயரில் நடை​பாதை, சாலையை மறித்து போராடு​வதை ஒரு​போதும் அனு​ம​திக்க முடி​யாது என தெரி​வித்​துள்ள உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி அமர்​வு, ரிப்​பன் மாளிகை முன்​பாக போராட்​டம் நடத்தி வரும் தூய்​மைப் பணியாளர்​களை உடனடி​யாக அங்​கிருந்து அப்​புறப்​படுத்த போலீ​ஸாருக்கு உத்​தர​விட்​டுள்​ளது.

சென்னை மாநக​ராட்​சி​யின் 5, 6-வது மண்​டலங்​களில் தூய்​மைப் பணிக்​காக ரூ.276 கோடிக்​கான ஒப்​பந்​தத்தை தனி​யாரிடம் ஒப்​படைப்​பதை எதிர்த்து தூய்​மைப் பணி​யாளர்​கள் மாநக​ராட்சி அலு​வல​கம் முன்​பாக கடந்த 13 நாட்​களுக்​கும் மேலாக தொடர் போராட்​டத்​தில் ஈடு​பட்டு வந்​தனர்.

சென்னை மாநக​ராட்சி ரிப்​பன் மாளிகை முன்​பாக சட்​ட​விரோத​மாக நடை​பாதை மற்​றும் சாலையைமறித்து பொது​மக்​களுக்கு இடையூறு ஏற்​படுத்தி வரும் தூய்​மைப் பணி​யாளர்​களை அங்​கிருந்து அப்​புறப்​படுத்த கோரி தேன்​மொழி என்​பவர் உயர் நீதி​மன்​றத்​தில் பொதுநல வழக்கு தொடர்ந்​தார். தலைமை நீதிபதி எம்​.எம்​.ஸ்ரீவஸ்​த​வா, நீதிபதி சுந்​தர்​மோகன் அமர்​வில் இந்த வழக்கு நேற்று விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது நடந்த வாதம்: மனு​தா​ரர் தரப்​பில் மூத்த வழக்​கறிஞர் வி.​ராக​வாச்​சா​ரி: தூய்​மைப் பணி​யாளர்​கள் கடந்த 13 நாட்​களாக நடத்தி வரும் போராட்​டத்​தால் தேவையற்ற பிரச்​சினை​கள் ஏற்​பட்டு வரு​கின்​றன.

அரசு தரப்​பில் ஆஜரான கூடு​தல் தலைமை வழக்​கறிஞர் ஜெ.ர​வீந்​திரன்: சட்​ட​விரோத போராட்​டத்தை கைவிட்டு நடை​பாதையை காலி செய்ய வேண்​டும் என போலீ​ஸார் தரப்​பில் கடந்த ஆக.7 அன்று நோட்​டீஸ் பிறப்​பிக்​கப்​பட்​டுள்​ளது.

தூய்​மைப் பணி​யாளர்​கள் தரப்​பில் வழக்​கறிஞர் ஆர்​.சங்​கரசுப்​பு: மாநக​ராட்சி அலு​வல​கத்​தில் பணி​யாற்றி வந்த துப்​புரவு தொழிலா​ளர்​கள் தங்​களது கோரிக்​கையை வலி​யுறுத்தி மாநக​ராட்சி அலு​வல​கம் முன்​பாகத்​தான் போராட்​டம் நடத்த முடி​யும். இதை சட்​ட​விரோதம் என்று கூற முடி​யாது.

இந்த பிரச்​சினை தொடர்​பாக அமைச்​சர்​கள் பேச்​சு​வார்த்தை நடத்தி வரும் நிலை​யில் அவர்​களை அங்​கிருந்து அப்​புறப்​படுத்​தக்​ கூடாது என்றார். அனைத்து தரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி​கள் தமது உத்​தர​வில் கூறிய​தாவது: தூய்​மைப் பணி​யாளர்​கள் தங்​களது கோரிக்​கைகளுக்​காக போராட்​டம் நடத்த உரிமை உண்டு என்​றாலும், போராட்​டம் என்ற பெயரில் நடை​பாதை, சாலைகளை மறித்து பொது​மக்​களுக்கு இடையூறாக போராடு​வதை ஒரு​போதும் அனு​ம​திக்க முடி​யாது.

எனவே, உரிய அனு​ம​தி​யின்றி நடை​பாதை​யில் போராட்​டம் நடத்தி வரும் அவர்​களை போலீ​ஸார் உடனடி​யாக அப்​புறப்​படுத்த வேண்​டும். அதே​நேரம் முறைப்​படி போராட்​டம் நடத்த அனு​மதி கோரி​னால் அதற்கு சட்​டப்​படி பரிசீலித்து போலீ​ஸார் அனு​மதி வழங்க வேண்​டும். இவ்​வாறு உத்​தர​விட்டு வழக்கை நீதிப​தி​கள் முடித்து வைத்​துள்​ளனர்.

வாழ்​வா​தா​ரம் பாது​காக்க கோரி.. இந்த நிலை​யில், தூய்​மைப் பணி​களை தனி​யாருக்கு வழங்​கும் தீர்​மானத்தை ரத்து செய்​து, தூய்​மைப் பணி​யாளர்​களின் வாழ்​வா​தா​ரத்தை பாது​காக்க கோரி உழைப்​போர் உரிமை இயக்​கம் சார்​பில் அதன் தலை​வ​ரான வழக்​கறிஞர் கு.​பாரதி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தார்.

நீதிபதி கே.சுரேந்​தர் முன்பு இந்த வழக்கு நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, நடந்த வாதம்:

மனு​தா​ரர் தரப்பு வழக்​கறிஞர் எஸ்​.கு​மாரசு​வாமி: சென்னை மாநக​ராட்​சி​யில் தூய்​மைப் பணி​களை தனி​யாரிடம் ஒப்​படைப்​பதை எதிர்த்​தும், இது​வரை பணி​யாற்றி வந்த தூய்​மைப் பணி​யாளர்​களை பணி நீக்​கம் செய்​வதை எதிர்த்​தும் சென்னை தொழிலா​ளர் நல தீர்ப்​பா​யத்​தில் வழக்கு தொடரப்​பட்டு நிலு​வை​யில் உள்​ளது. இந்த சூழலில் மாநக​ராட்சி தூய்​மைப் பணி​களை தனி​யாரிடம் ஒப்​படைத்து சென்னை மாநக​ராட்சி நிர்​வாகம் கடந்த ஜூன் மாதம் தீர்​மானம் நிறைவேற்​றி​யுள்​ளது.

மாநக​ராட்சி நிர்​வாகத்​தின் இந்த நடவடிக்​கை​யால் தற்​போது 2 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட தொழிலா​ளர்​கள் வேலை இழக்​கும் அபா​யம் ஏற்​பட்​டுள்​ளது. இந்த பணி​களை தனி​யாரிடம் ஒப்​படைத்​தால் தற்​போது ரூ.750 ஊதி​யம் பெறும் ஊழியர்​களுக்கு ரூ.500 மட்​டும்​தான் கிடைக்​கும். பாதி பேருக்கு வேலை கிடைக்​காது. அதனால்​தான் தொழிலா​ளர்​கள் போராட்​டம் நடத்தி வரு​கின்​றனர்.

மாநக​ராட்சி நிர்​வாகம் தரப்​பில் அரசு தலைமை வழக்​கறிஞர் பி.எஸ்​.​ராமன்: தூய்மைப் பணி​யாளர்​கள் யாரும் வேலையை விட்டு வெளி​யேற்​றப்பட மாட்​டார்​கள். அவர்​களுக்கு ஒப்​பந்​த​தா​ரர் மூல​மாக பணி வழங்​கப்​படும். சென்னை மாநக​ராட்​சி​யில் மொத்​தம் உள்ள 15 மண்​டலங்​களில் 11 மண்​டலங்​களில் தூய்​மைப் பணி ஏற்​கெனவே தனி​யாருக்கு ஒப்​படைக்​கப்​பட்டு பணி​கள் நடந்து வரு​கின்​றன.

தற்​போது 5, 6-வது மண்​டலங்​களின் தூய்​மைப் பணி தனி​யாரிடம் ஒப்​படைக்​கப்​பட்​டுள்​ளது. ஒப்​பந்த அடிப்​படை​யில் பணி​யாற்​றும் 2 ஆயிரம் தூய்​மைப் பணி​யாளர்​களுக்​கும் ஒப்​பந்த நிறு​வனம் ஊதி​யத்​துடன், வருங்​கால வைப்பு நிதி, இன்​சூரன்ஸ் உள்​ளிட்ட சலுகைகளு​டன் பணிப் பாது​காப்பு வழங்​கப்​படும்.

தனி​யார் ஒப்​பந்த நிறு​வனம் தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் விஜய் நாராயண்: தூய்​மைப் பணி​களை தனி​யாருக்கு வழங்​கு​வது என்​பது அரசின் கொள்கை முடிவு. இதில் விதி​மீறல்​கள் இருந்​தால் மட்​டுமே நீதி​மன்​றம் தலை​யிட முடி​யும். மொத்​தம் 1,900 தொழிலா​ளர்​கள் தேவை என்ற நிலை​யில் பணி​யில் சேரு​வதற்​கான தேதி ஆக.31 வரை நீட்​டிக்​கப்​படும். இவ்​வாறு வாதம் நடந்​தது. அனைத்து தரப்பு வாதங்​களை​யும்​ கேட்​ட நீதிப​தி கே.சுரேந்​தர்​ வழக்​கின்​ தீர்ப்​பை தேதி குறிப்​பி​டாமல்​ தள்​ளிவைத்​தார்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in