விழுப்புரத்தில் தனியார் பள்ளியில் பரிதாபம்: பிளஸ் 1 மாணவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு

மோகன்ராஜ்
மோகன்ராஜ்
Updated on
1 min read

விழுப்புரம்: தனி​யார் பள்ளி வகுப்​பறை​யில் திடீரென பிளஸ்-1 மாணவர் மயங்கி விழுந்து உயி​ரிழந்​துள்​ளது அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​உள்ளது. விழுப்​புரம் மேல் தெரு​வைச் சேர்ந்​தவர் குமார் மனைவி மகேஸ்​வரி. கிராம உதவி​யாளர். இவரது மகன் மோகன்​ராஜ்(16), திருவிக வீதி​யில் உள்ள பிரபல தனி​யார் பள்​ளி​யில் பிளஸ் 1 வகுப்பு படித்து வந்​தார். பள்​ளி​யில் தின​மும் காலை 7 மணிக்கு நடை​பெறும் சிறப்பு வகுப்​பில் மாணவர் மோகன்​ராஜ் பங்​கேற்​றுள்​ளார்.

இந்​நிலை​யில் நேற்று காலை வகுப்பு தொடங்​கு​வதற்கு முன்​பாக திடீரென மயங்கி விழுந்த மோகன்​ராஜ் மயங்கி கீழே விழுந்​தார். தகவலறிந்து பள்​ளிக்​குச் சென்ற தாயார் மகேஸ்​வரி, மகனை நேருஜி சாலை​யில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனைக்கு அழைத்​துச் சென்​றார். அங்கு மருத்​து​வர்​கள் மாணவரைப் பரிசோ​தித்​த​போது, ரத்​தத்​தில் ஆக்​ஸிஜன் அளவு குறை​வாக இருப்​பது தெரியவந்தது.

இதையடுத்​து, மேல் சிகிச்​சைக்​காக மற்​றொரு தனி​யார் மருத்​து​வ​மனைக்கு கொண்டு சென்​றனர். அங்கு மாணவரை பரிசோதித்த மருத்​து​வர்​கள், அவர் ஏற்கெனவே உயி​ரிழந்​து​விட்​ட​தாக தெரி​வித்​துள்​ளனர்.

புத்தக சுமை அதிகம்... இதுகுறித்து மாணவரின் தாயார் மகேஸ்​வரி கூறும்​போது, “என் மகனுக்கு எந்த நோயும் இல்​லை. நன்​றாகப் படிக்​கும் மாணவன். 10-ம் பத்​தாம் வகுப்பு பொதுத் தேர்​வில் 452 மதிப்​பெண் பெற்​றுள்​ளான். தற்​போது அவன் கொண்டு செல்​லும் புத்​தகப் பையின் சுமை அதி​கம். இதை தூக்​கிக் கொண்டு 4 மாடிக்கு படிக்​கட்​டில் ஏறிச் சென்​ற​தால்​தான் பிரச்​சினை ஏற்பட்டுள்ளது” என்​றார்.

இது தொடர்​பாக மகேஸ்​வரி அளித்த புகாரின் பேரில் விழுப்​புரம் நகர போலீ​ஸார் வழக்கு பதிவு செய்து விசா​ரணை நடத்தி வருகின்​றனர். “பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகு​தான், மாணவரின் மரணம் குறித்த முழுவிவரங்​கள் தெரிய​வரும்” என்று போலீ​ஸார் தெரி​வித்​தனர்.

பிளஸ் 1 வகுப்​புக்கு நடப்​பாண்​டிலேயே பொதுத் தேர்வு ரத்து செய்​யப்​பட்​டுள்​ள​தாக அறிவிக்கப்பட்​டுள்ள நிலை​யில், பிளஸ் 1 வகுப்பு மாணவர்​களுக்கு சிறப்பு வகுப்பு நடத்​தப்​பட்​டுள்​ளதும்​, அதில்​ பங்​கேற்​ற மாணவர்​ உயி​ரிழந்​ததும்​ சர்​ச்​சையை ஏற்​படுத்​தி உள்​ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in