ரூ.301 கோடிக்கு கோ-ஆப்டெக்ஸ் துணிகள் விற்பனை

ரூ.301 கோடிக்கு கோ-ஆப்டெக்ஸ் துணிகள் விற்பனை
Updated on
1 min read

தமிழக சட்டப்பேரவையில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானியக் கோரிக்கை கொள்கை விளக்கக் குறிப்பை அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா திங்கள்கிழமை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:

கைத்தறி மற்றும் விசைத்தறி துணி ரகங்கள் 2013-14ம் ஆண்டில் ரூ.301.44 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. இவற்றில் ஏற்றுமதி விற்பனை ரூ.1.25 கோடி. இது முந்தைய ஆண்டு சில்லறை விற்பனையைவிட ரூ.56.83 கோடி அதிகமாகும்.

விழாக்கால கொள்முதல் என்ற அடிப்படையை மாற்றி, தொடர் கொள்முதல் செய்ததாலும் விற்பனை நிலையங் களை நவீனப்படுத்தியதாலும், புதிய வடிவமைப்புகளுடன் கூடிய கைத்தறி துணிகளை அறிமுகப் படுத்தியதாலும் இந்த வரலாற்று விற்பனை சாதனையை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் எட்டி யுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in