தொழில் முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை தேவை: அன்புமணி

தொழில் முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை தேவை: அன்புமணி
Updated on
1 min read

சென்னை: இது​வரை ஈர்க்​கப்​பட்ட முதலீடு​கள் குறித்து வெள்ளை அறிக்​கையை வெளி​யிட்​டு​விட்​டு, முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வெளி​நாடு பயணம் மேற்​கொள்ள வேண்​டும் என்று பாமக தலை​வர் அன்​புமணி தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக நேற்று அவர் வெளி​யிட்ட அறிக்​கை​: தமிழகத்​துக்​கான தொழில் முதலீடு​களை திரட்​டு​வதற்​காக முதல்​வர் மு.க.ஸ்டா​லின் தலை​மையி​லான குழு, இங்​கிலாந்​து, ஜெர்​மனி ஆகிய நாடு​களுக்​குச் செல்​ல​வுள்​ள​தாக செய்​தி​கள் வெளியாகியுள்​ளன.

இது​வரை 4 கட்​டங்​களாக 5 நாடு​களில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்ட முதல்​வர் ஸ்டா​லின், அவற்​றின் மூலம் ரூ.18,498 கோடி முதலீடும், ஸ்பெ​யின் தவிர்த்த பிற நாடு​களி​லிருந்து கிடைக்​கும் முதலீடு​களின் மூல​மாக மட்​டும் 28,516 பேருக்கு வேலை கிடைக்கும் என்​றும் கூறி​யிருந்​தார். ஆனால், முதல்​வர் உறு​தி​யளித்​த​வாறு எது​வும் நடக்​க​வில்​லை.

அண்​மை​யில், தூத்​துக்​குடி​யில் நடத்​தப்​பட்ட மண்டல முதலீட்​டாளர்​கள் மாநாடு உள்பட கடந்த நான்​கரை ஆண்​டு​களில் மொத்​தம் ரூ.10.62 லட்​சம் கோடி முதலீடு ஈர்க்​கப்​பட்​ட​தாக​வும் அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. ஆனால், அதில் 10 சதவீதம் கூட தொழில் திட்​டங்​களாக மாற்​றப்​பட​வில்​லை.

கடந்த நான்​கரை ஆண்​டு​களில் மொத்​தம் 10.62 லட்​சம் கோடி தொழில் முதலீடு​களை ஈர்க்க ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​திடப்​பட்​டுள்​ளன. ஆனால், வெளி​நாடு​களுக்கு சுற்​றுப்​பயணம் மூலம் ஈர்க்​கப்​பட்ட முதலீடு வெறும் ரூ.18,498 கோடி​தான்.

எனவே, முதல்​வரின் வெளி​நாட்டு பயணங்​களின் மூல​மாக தமிழகத்​துக்கு எவ்​வளவு முதலீடு திரட்​டப்​பட்​டுள்​ளது. இவற்​றில் எவ்​வளவு முதலீடு​கள் தொழிற்​சாலைகளாக மாறி​யுள்​ளன. எவ்​வளவு பேர் வேலை பெற்​றுள்​ளனர் என்​பது குறித்த வெள்ளை அறிக்​கையை முதல்​வர் வெளி​யிட வேண்​டும். இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in