ஆட்டோ, பைக் டாக்ஸி, கார் கட்டணத்துக்கு புதிய கொள்கை: தமிழக அரசு விரைவில் அறிமுகம் செய்கிறது

ஆட்டோ, பைக் டாக்ஸி, கார் கட்டணத்துக்கு புதிய கொள்கை: தமிழக அரசு விரைவில் அறிமுகம் செய்கிறது
Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் கார், ஆட்​டோ, பைக் டாக்​ஸி கட்டணத்துக்கு புதிய கொள்கையை தமிழக அரசு அறி​முகம் செய்யவுள்ளது. தமிழகத்​தில் தற்​போது பயணி​கள் மற்​றும் வாடகை வாக​னத்​தினர் இடையே ஒருங்​கிணைப்​பாளர்​களுக்​கான எந்தவொரு முறையான கட்​டமைப்​பும் இல்​லை.

குறிப்​பாக, பைக் டாக்​ஸிகள், தெளி​வான கட்டண விதி​கள், பாது​காப்பு அம்​சங்​கள் அல்​லது குறை​களுக்கு தீர்வு காணும் வழி​முறைகள் என எது​வுமின்றி ஒரு சட்​டபூர்​வ​மற்ற நிலை​யில் இயங்கி வரு​கின்​றன.

இந்​நிலை​யில், தமிழகத்​தில் கார், ஆட்டோ மற்​றும் பைக் டாக்ஸி ஒருங்​கிணைப்​பாளர்​களுக்​கான முதல் கொள்​கையை ஆகஸ்ட் மாத இறு​தி​யில் தமிழக அரசு வெளி​யிடப்பட உள்​ளது. இது மத்​திய அரசின் மோட்​டார் வாகன ஒருங்​கிணைப்​பாளர் வழிகாட்டுதல்களுக்கு இணங்க உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது. இந்​தக் கொள்​கை​யின் மூலம் ஒருங்​கிணைப்​பாளர்​கள், ஓட்​டுநர்​கள் மற்றும் பயணி​கள் ஆகியோரின் நலன்​கள் பாது​காக்​கும் வகை​யில் பல்​வேறு நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்பட உள்ளன.

அடிப்படைக் கட்டணம்... இந்த புதிய கொள்​கை​யில் பைக் டாக்​ஸிகளுக்​கான புதிய வழி​காட்​டு​தல்​கள் வழங்​கப்பட இருக்​கின்​றன. அதன்​படி பயணத்​தின் முதல் 3 கிலோ மீட்​டருக்கு மாநில அரசே அடிப்​படை கட்​ட​ணத்​தை​யும் நிர்​ண​யிக்​கும். அதைத்​தொடர்ந்து அடிப்​படைக் கட்​ட​ணத்​தில் தேவைக்கு ஏற்ப 50 சதவீதம் முதல் 200 சதவீதம் வரை டைனமிக் விலையை நிர்​ண​யிக்க அனுமதிக்கப்படும்.

இதில் சொந்த வாக​னங்​களை பயன்​படுத்​தும்​போது ஓட்​டுநர்​களுக்கு கட்​ட​ணத்​தில் குறைந்​த​பட்​சம் 80 சதவீத பங்கு கிடைக்​கும். ஒருங்​கிணைப்​பாள​ருக்கு சொந்​த​மான வாக​னங்​களில் உள்ள ஓட்​டுநர்​கள் 60 சதவீதம் பெறு​வார்​கள். நியாயமற்ற முறையில் பயணங்​களை ரத்து செய்​தால் அபராத​மும் விதிக்​கப்​படும். இதையொட்டி அனைத்து டிஜிட்​டல் பயணத்​தளங்​களுக்​கும் 6 ஆண்டு காலத்​துக்கு ரூ.5 லட்​சம் உரிமக் கட்​ட​ணம் நிர்​ண​யிக்​க​வும்​ அரசு பரிசீலித்​து வரு​கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in