தூய்மைப் பணியை தனியாருக்கு தருவதை எதிர்த்து வழக்கு: மாநகராட்சி நிர்வாகம், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

தூய்மைப் பணியை தனியாருக்கு தருவதை எதிர்த்து வழக்கு: மாநகராட்சி நிர்வாகம், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

Published on

சென்னை: சென்னை மாநக​ராட்​சி​யில், தூய்மை பணி​களை தனி​யாருக்கு வழங்​கு​வதை எதிர்த்து தொடரப்​பட்ட வழக்​கில், மாநக​ராட்சி நிர்​வாக​மும். தமிழக அரசும் இன்று பதிலளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​வி்ட்​டுள்​ளது.

சென்னை மாநக​ராட்​சி​யின், 5-வது மற்​றும் 6-வது மண்​டலங்​களில் தூய்​மைப் பணிக்​கான ரூ. 276 கோடிக்​கான ஒப்​பந்​தத்தை தனியாருக்கு வழங்​கியதை எதிர்த்​து, தூய்​மைப் பணி​யாளர்​கள் மாநக​ராட்சி அலு​வல​கம் முன்​பாக கடந்த 10 நாட்​களுக்​கும் மேலாக தொடர் போராட்​டத்​தில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், மாநக​ராட்சி தூய்​மைப் பணி​களை தனி​யாருக்கு வழங்​கும் தீர்​மானத்தை ரத்து செய்​து, தூய்மை பணியாளர்களின் வாழ்​வா​தா​ரத்தை பாது​காக்​கக்​கோரி, உழைப்​போர் உரிமை இயக்​கம் சார்​பில், அதன் தலை​வ​ரான வழக்கறிஞர் கு.​பார​தி, சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

அதில், மாநக​ராட்சி நிர்​வாகத்​தின் இந்த நடவடிக்​கை​யால் இந்த இரு மண்​டலங்​களி​லும் 2 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட நிரந்தர துப்​புரவு பணி​யாளர்​கள், வேறு மண்டலங்களுக்கு மாற்​றப்​படு​வர். சுமார் 2 ஆயிரம் தற்​காலிக பணி​யாளர்​கள் வேலை​யிழக்​கும் அபா​யம் ஏற்​பட்​டுள்​ளது.

இப்​பிரச்​சினை தொடர்​பாக ஏற்​க​னவே தொழிலா​ளர் நீதி​மன்​றத்​தில் வழக்கு நிலு​வை​யில் உள்​ளது. ஆனால், அதை மீறி தற்​போது தனி​யாருக்கு இந்த ஒப்​பந்​தம் வழங்​கப்​பட்​டுள்​ளது. எனவே மாநக​ராட்​சி​யின் தீர்​மானத்தை ரத்து செய்ய வேண்​டும் என கோரி​யிருந்​தார். இந்த வழக்கு நீதிபதி கே. சுரேந்​தர் முன்​பாக நேற்று விசா​ரணைக்குவந்​தது. அப்​போது அரசு தலைமை வழக்​கறிஞர் பி.எஸ்​.​ராமன் ஆஜராகி, ‘இந்த வழக்​கில் பதில்​மனு தாக்​கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்​டும்’ என்​றார்.

அப்​போது மனு​தா​ரர் தரப்​பில், “சுமார் 2 ஆயிரம் பணியாளர்கள் மாநக​ராட்சி அலு​வல​கத்​தின் முன்பாக இரவும், பகலு​மாக கொட்​டும் மழை​யிலும் 10 நாட்​களுக்​கும் மேலாக போராடி வரு​கின்​றனர்.

குப்​பையை அள்ளி சுத்​தம் செய்த அவர்​களை மாநக​ராட்சி நிர்​வாகம் குப்​பையைப் போல வீசி எறி்ந்​துள்​ளது. அவர்​களின் பணி​பாது​காப்​புக்கு உத்​தர​வாதம் அளிக்க வேண்​டும்” என, வாதிடப்​பட்​டது. இதையடுத்து நீதிப​தி, இந்த வழக்​கில் அரசு தரப்​பில் பதில் மனு தாக்​கல் செய்ய உத்​தரவி்ட்​டு, விசாரணையை இன்​றைக்கு (12-ம் தேதி) தள்ளி வைத்​தார்.

வழக்​கறிஞர் முறை​யீடு...! - இதற்கிடையே, தலைமை நீதிபதி எம்​.எம்​.வஸ்​த​வா, நீதிபதி சுந்​தர் மோகன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில், வழக்​கறிஞர் வினோத் என்​பவர் ஆஜராகி, மாநக​ராட்சி துப்​புரவு தொழிலா​ளர்​கள் முன்​அறி​விப்பு இல்​லாமல் திடீர் போராட்​டத்​தில் ஈடு​பட்​டுள்​ளனர். இதனால், குப்​பைகள் அள்​ளப் ​ப​டா​மல் பொது​மக்​கள் பாதிப்​புக்​குள்​ளாகி வரு​கின்​றனர். எனவே, இந்த போராட்​டம் சட்​ட​விரோதம் என அறிவிக்க வேண்​டும் என, முறை​யீடு செய்​தார். இதையடுத்​து, நீதிப​தி​கள் இதுதொடர்​பாக மனு​தாக்​கல் செய்​தால் இன்று விசா​ரிக்​கப்​படும் என, தெரி​வித்​துள்​ளனர்​.

கட்சித் தலைவர்கள் ஆதரவு: பணி நிரந்​தரம் கோரி 11-வது நாளாக ரிப்​பன் மாளிகை முன்பு தூய்​மைப் பணி​யாளர்​கள் தொடர் போராட்​டம் நடத்தி வரு​கின்​றனர். அவர்​களை தமிழ்​நாடு காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை, தேமு​திக பொதுச்​செயலாளர் பிரேமல​தா, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் உள்​ளிட்​டோர் நேற்று நேரில் சந்​தித்து ஆதரவு தெரிவித்தனர். தவெக தலை​வர் விஜய் போராட்​டத்​தில் ஈடு​பட்​டு​வரும் தூய்​மைப் பணி​யாளர்​களை பனையூரில் உள்ள கட்சி அலு​வல​கத்​துக்கு வரவழைத்​து, அவர்​களது கோரிக்​கைகளை கேட்​டறிந்து அவர்​களுக்​கான தனது ஆதர​வை​யும் தெரிவித்​தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in