சட்டவிரோத வருவாயை பிரிக்கவே மாதந்தோறும் கூட்டம்: கனிமவள அதிகாரிகள் மீது நீதிபதி கடும் அதிருப்தி

சட்டவிரோத வருவாயை பிரிக்கவே மாதந்தோறும் கூட்டம்: கனிமவள அதிகாரிகள் மீது நீதிபதி கடும் அதிருப்தி
Updated on
2 min read

மதுரை: சட்​ட​விரோத வரு​வாயை தங்​களுக்​குள் பிரித்​துக் கொள்​ளவே கனிம வளத்​துறை அதி​காரி​கள் மாதந்தோறும் கூட்​டம் நடத்​து​வ​தாக உயர் நீதி​மன்ற நீதிபதி கடும் அதிருப்தி தெரி​வித்​தார்.

திண்​டுக்​கல் மாவட்டம், சின்​னாள​பட்டி பகு​தி​யைச் சேர்ந்த தினேஷ்கு​மார், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு: மாற்​றுத் திற​னாளி​யான நான், 2018-ம் ஆண்​டில் திண்​டுக்​கல் மாவட்ட புவி​யியல் மற்​றும் சுரங்​கத்​துறை​யின் மாவட்ட கனிம நிதி அறக்​கட்​டளை​யில் கணக்​காள​ராகச் சேர்ந்​தேன். 2022-ம் ஆண்​டில் மாரி​யம்​மாள் என்​பவர் உதவி இயக்​குந​ராக பொறுப்​பேற்​றார்.

அவர் தற்​காலிக பணி​யில் இருந்த என்னை நீக்​கி​னார். பிறகு அவருக்கு உதவி​யாள​ராகப் பணிபுரி​யு​மாறும், அதற்கு ஊதி​யம் தரு​வ​தாக​வும் கூறி​னார். அதன்​படி, அவருக்கு உதவி​யாள​ராகப் பணிபுரிந்​தேன். குவாரி உரிமை​யாளர்​கள் எனது வங்​கிக் கணக்​கில் செலுத்​தும் லஞ்​சப் பணத்தை வாரத்​துக்கு ஒரு​முறை எடுத்து உதவி இயக்​குநர் மாரி​யம்​மாளிடம் ஒப்​படைத்து விடு​வேன். அப்​போது போலி நடைச்​சீட்டு வழங்​கிய​தாக புகார் எழுந்​தது. அதற்கு நான்​தான் காரணம் என மாரி​யம்​மாள் கூறி​னார்.

இதனால் அவரது தூண்​டு​தலின்​ பேரில் குவாரி உரிமை​யாளர்​கள் கொடுத்த லஞ்​சப் பணத்தை என்​னிடம் கேட்டு கொலை மிரட்டல் விடுகின்​றனர். எனக்கும், என் தாயார் உயிருக்கு அச்​சுறுத்​தல் ஏற்​பட்​டுள்​ளது.

60-க்​கும் மேற்​பட்ட குவாரி உரிமை​யாளர்​களிடம் இருந்து மாரி​யம்​மாள் வங்​கிக் கணக்கு மூலம் லஞ்​சப்​பணம் வாங்கியதற்​ கான ஆதா​ரங்​கள் என்​னிடம் உள்​ளன. எனவே எனக்​கும், எனது தாயாருக்​கும் போலீஸ் பாது​காப்பு வழங்க உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு அதில் கூறி​யிருந்​தார்.

இந்த மனு நீதிபதி பி.பு​கழேந்தி முன் விசா​ரணைக்கு வந்​தது. அரசு வழக்​கறிஞர் வாதிடும்​போது, “மனு​தா​ரர் உள்​நோக்​கத்​துடன் இந்த வழக்கை தாக்​கல் செய்து உள்​ளார். தனிப்​பட்ட முறையில் குவாரி உரிமை​யாளர்​களிடம் இருந்​தும் மனு​தா​ரர் ஆதா​யம் அடைந்​துள்​ளார். எனவே மனுவை தள்​ளு​படி செய்யவேண்​டும்” என்​றார்.

மனு​தா​ரரின் வழக்​கறிஞர் வாதிடும்​போது, “கனிமவள உதவி இயக்​குநர் மாரி​யம்​மாள், லஞ்ச வழக்​கால் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்ட 3 மாதத்​தில் மீண்​டும் அதே பணி​யிடத்​தில் நியமிக்​கப்​பட்​டுள்​ளார். அவர் பல்​வேறு குவாரி உரிமை​யாளர்​களிடம் இருந்து லஞ்​சம் பெற்​றதற்கு ஆதா​ரங்​கள் உள்​ளன.

தற்​போது, அவர் தேனி மாவட்​டத்​தில் பணி​யில் இருப்​ப​தால் இந்த மாவட்​டத்​தில் இருந்து சுமார் ரூ.2,000 கோடி மதிப்​புள்ள கனிமவளங்​கள் கேரளா​வுக்கு கடத்​தப்​படு​கின்​றன” என்றார். இதையடுத்து நீதிப​தி, “கனிம வள அதி​காரி​கள் கூட்​டம் நடத்​து​வ​தே, ஒவ்​வொரு மாத​மும் எவ்​வளவு வரு​மானம் வரு​கிறது? அதை எப்​படி பிரித்​துக் கொள்​வது என்​ப​தற்​காகத்​தான்.

அதி​காரி​களும், குவாரி உரிமை​யாளர்​களும் அரசுக்​குச் சேர வேண்​டிய வரு​வாயைப் பங்கு போட்​டுக் கொள்​கின்​றனர். தமிழகம் முழு​வதும் இதே நிலை​தான் நீடிக்​கிறது. மனு​தாரர் வங்​கிக் கணக்​கில் குவாரி உரிமை​யாளர்​கள் எதற்​காக பணம் செலுத்​தினர்? இதன் மூலம் யார் ஆதாயம் அடைந்​தனர்? என்று அம்​பாத்​துறை காவல் ஆய்​வாளர் விரிவாக​வும், நேர்​மை​யாக​வும் விசா​ரணை நடத்தி நீதி​மன்​றத்​தில் அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டும்.

தவறும்​பட்​சத்​தில் இந்த விவ​காரம் சிபிசிஐடி விசா​ரணைக்கு மாற்​றப்​படும். இந்த வழக்​கில் நேர்​மை​யாக விசா​ரணை நடத்தினால், அரசுக்கு குறைந்​த​பட்​சம் ஆயிரம் கோடி ரூபாய் வரு​வாய் பெற்​றுத்தர முடி​யும். இந்த விசா​ரணைக்கு தேவை​யான உதவிகளை திண்​டுக்​கல் மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் செய்ய வேண்​டும். விசா​ரணை ஆக.22-க்கு தள்ளிவைக்கப்படுகிறது’’ என உத்​தரவிட்​டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in