வெளிமாநில தமிழ் சங்கங்களுக்கு தமிழ் பாடநூல்களை இலவசமாக வழங்கி வந்ததை நிறுத்திவைப்பதா? - நயினார் நாகேந்திரன் கண்டனம்

வெளிமாநில தமிழ் சங்கங்களுக்கு தமிழ் பாடநூல்களை இலவசமாக வழங்கி வந்ததை நிறுத்திவைப்பதா? - நயினார் நாகேந்திரன் கண்டனம்
Updated on
1 min read

சென்னை: வெளி​மாநில தமிழ் சங்​கங்​களுக்கு 40 ஆண்​டு​களாக தமிழ் பாடநூல்​கள் இலவச​மாக வழங்​கப்​பட்டு வந்​ததை நிறுத்திவைப்​பது கண்​டனத்​துக்​குறியது என பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை: வெளி​மாநில தமிழ்ச்​சங்​கங்​களுக்கு சுமார் நாற்​பது ஆண்​டு​களாக தமிழ்ப்பாடநூல்களை இலவச​மாக விநி​யோகித்து வந்த திட்​டத்தை நிதி நெருக்​கடி எனக் காரணம் காட்டி திமுக அரசு நிறுத்​தி​வைத்​திருப்​பது கண்​டனத்​துக்​குரியது.

அயல் மாநிலங்​களில் உள்ள தமிழ்ச்​சங்​கங்​கள் ஏற்​க​னவே நிதிப்​பற்​றாக்​குறை​யால் அவதி​யுற்று வரும் வேளை​யில், அவர்​களின் மீது மேலும் நிதிச்​சுமையை ஏற்​று​வது நியாய​மா? இதனால் அதி​கம் பாதிக்​கப்​படு​வது அயல் மாநிலங்​களில் தமிழ் படிக்​கும் ஏழை எளிய தமிழ் வம்​சாவளி மாணவர்​கள் தான் என்​பது தெரி​யா​தா, இது​தான் தமிழ் வளர்ச்​சி​யில் திரா​விட மாடல் கொண்​டுள்ள அக்​கறை​யா, கோபாலபுரம் தலை​முறை​யினரின் பகட்டு செல​வு​களான பேனா சிலை, கார் ரேஸ், பிரச்​சார நடனம், விளம்​பரங்​கள் ஆகியவற்றுக்கு நிதியை அள்​ளித் தெளிக்​கும் முதல்​வர் மு.க. ஸ்டா​லின் கண்​களுக்கு வெளி​மாநிலங்​களில் படிக்​கும் தமிழ் தலை​முறை​யினரின் வறுமை​யும், தமிழ் வளர்ச்​சி​யும் புலப்​ப​டாதது ஏனோ? அன்​னைத் தமிழின் வளர்ச்​சி​யில் அரசி​யலைத் தாண்டி உண்​மை​யாகவே திமுக அரசுக்கு அக்​கறை இருந்​தால் உடனடி​யாக இம்​முடிவைக் கைவிட்டு வெளி​மாநில தமிழ்ச்​சங்​கங்​களுக்கு பாடநூல்​களை வழக்​கம்போல இலவச​மாக வழங்க வேண்​டும். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in