எம்ஜிஆர், ஜெயலலிதா குறித்து விமர்சனம்: விசிக தலைவர் திருமாவளவனுக்கு ஓபிஎஸ் கண்டனம்

எம்ஜிஆர், ஜெயலலிதா குறித்து விமர்சனம்: விசிக தலைவர் திருமாவளவனுக்கு ஓபிஎஸ் கண்டனம்
Updated on
1 min read

சென்னை: எம்​ஜிஆர், ஜெயலலிதா குறித்து விசிக தலை​வர் திரு​மாவளவன் விமர்​சித்​ததற்கு முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்வம் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார்.

இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: பேரறிஞர் அண்​ணா​வின் மறைவுக்கு பிறகு, எம்​ஜிஆர் அதிமுக எனும் மாபெரும் இயக்​கத்​தைத் தோற்​று​வித்​து, முதல் இடைத்தேர்​தலிலேயே தனக்​குள்ள மக்​கள் செல்​வாக்கை நிரூபித்தவர். 1977-ம் ஆண்டு நடை​பெற்ற பொதுத் தேர்​தலில் மாபெரும் வெற்றி பெற்று முதல்​வ​ராக பொறுப்​பேற்​றதுடன், தொடர்ந்து 3 முறை ஆட்​சியை அமைத்து முதலமைச்​ச​ராகவே மண்​ணுலகை விட்டு விண்​ணுல​கிற்​குச் சென்​றவர்.

சாதி, மதங்​களுக்கு அப்பாற்பட்டவர் எம்​ஜிஆர். அவரின் அதி​முக அனை​வருக்​கு​மான ஒரு மாபெரும் மக்​கள் இயக்​கம். இந்​தக் கொள்கை தான், மொத்த​முள்ள 58 ஆண்டு கால திரா​விட ஆட்​சி​யில், 30 ஆண்​டு​கள் அதி​முக ஆட்சி அமைய வழி​வகுத்​தது. இப்படிப்​பட்ட மக்​கள் தலை​வரை, திரா​விட இயக்​கத்​தில் பார்ப்​பனி​யத்தை ஊடுரு​வச் செய்​தவர் என்​றும், ஒரு பார்ப்​பனிய பெண் திரா​விட இயக்​கத்​தின் தலை​வ​ராக மாற பாதை வகுத்து தந்​தவர் என்​றும் திரு​மாவளவன் பேசி இருப்​பது கடும் கண்டனத்துக்குரியது.

பிற்​படுத்​தப்​பட்​டோருக்​கான இட ஒதுக்​கீட்டை 30 சதவீதத்​திலிருந்து 50 சதவீத​மாக உயர்த்​திய பெரு​மைக்​குரிய​வர் எம்​ஜிஆர். 69 சதவீத இட ஒதுக்​கீட்​டுக்கு சட்​டப் பாது​காப்பு வாங்​கிக் கொடுத்​தவர் ஜெயலலி​தா. அனைத்​துத் தரப்பு மக்​களுக்​காக​வும் பாடு​பட்ட எம்​ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை விமர்​சிப்​பது நியாயமற்ற செயல். வரு​கின்ற தேர்​தலில், கூடு​தல் தொகு​தி​கள் வாங்க வேண்டும் என்​ப​தற்​காகவோ அல்​லது கூட்​டணி அமைச்​சர​வை​யில் இடம் பெற வேண்​டும் என்​ப​தற்​காகவோ, திமுகவையோ அல்லது திமுக தலை​வரையோ திரு​மாவளவன் புகழ்ந்து பேசுவ​தில் யாருக்​கும் எவ்​வித மாறு​பட்ட கருத்​தும் இருக்க முடி​யாது.

அதே சமயத்​தில், மக்​கள் செல்​வாக்கு பெற்ற, சாதி மதங்​களைக் கடந்த மறைந்த தலை​வர்​களை விமர்​சிப்​பது என்​பது நாகரி​கமற்ற செயல். எம்​ஜிஆர், ஜெயலலிதா குறித்த விமர்​சனத்தை திரு​மாவளவன் உடனடி​யாக திரும்​பப் பெற வேண்​டும்​. இவ்​வாறு அறிக்​கையில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in