‘அம்ரித் பாரத்’ திட்டத்தில் மேம்படுத்தப்படும் 4 ரயில் நிலையங்கள்: 5 மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும்

‘அம்ரித் பாரத்’ திட்டத்தில் மேம்படுத்தப்படும் 4 ரயில் நிலையங்கள்: 5 மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும்
Updated on
1 min read

சென்னை: அம்​ரித் பாரத் திட்​டத்​தின் கீழ் மேம்​படுத்​தப்​படும் அரக்​கோணம், திருத்​தணி, கும்​மிடிப்​பூண்​டி, திரு​வள்​ளூர் ஆகிய 4 ரயில் நிலை​யங்​களை அடுத்த 5 மாதங்​களில் பயன்​பாட்​டுக்கு கொண்டு வர தெற்கு ரயில்வே திட்​ட​மிட்​டுள்​ளது.

அம்​ரித் பாரத் திட்​டத்​தின் கீழ், சென்னை ரயில்வே கோட்​டத்​தில் பெரம்​பூர், திரு​வள்​ளூர், அரக்​கோணம், திருத்​தணி, ஜோலார்​பேட்டை, கும்​மிடிப்​பூண்​டி, கூடு​வாஞ்​சேரி, செங்​கல்​பட்​டு, அம்​பத்​தூர், கிண்​டி, மாம்​பலம், சென்னை பூங்​கா, சென்னை கடற்​கரை, குரோம்​பேட்​டை, திரிசூலம் ஆகிய 15 நிலை​யங்​களை மேம்​படுத்த நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது.

கடந்த மே மாதத்​தில், தெற்கு ரயில்​வே​யில் பரங்​கிமலை, சூலூர்​பேட்டை உட்பட 13 ரயில் நிலை​யங்​கள் ரூ.129.66 கோடி மதிப்​பில் மேம்​படுத்​தப்​பட்​டு, திறக்​கப்​பட்​டன. தொடர்ந்​து, பல்​வேறு நிலை​யங்​களில் மேம்​படுத்​தும் பணிகள் நடக்​கின்றன. இந்​நிலை​யில், அம்​ரித் பாரத் திட்​டத்​தின் கீழ் அரக்​கோணம், திருத்​தணி, கும்​மிடிப்​பூண்​டி, திரு​வள்​ளூர் ஆகிய 4 ரயில் நிலை​யங்​களை அடுத்த 5 மாதங்​களில் பயன்​பாட்​டுக்​குக் கொண்டு வர தெற்கு ரயில்வே திட்​ட​மிட்​டுள்​ளது.

தெற்கு ரயில்வே பொது​மேலா​ளர் ஆர்​.என்​.சிங், சென்னை ரயில்வே கோட்ட மேலா​ளர் சைலேந்​திர சிங் ஆகியோர் சென்னை புறநகர் மின்​சார ரயில் வழித்​தடங்​களில் ஆய்வு மேற்​கொண்​டனர். குறிப்​பாக, ரயில்​கள் இயக்​கம், பாது​காப்பு அம்​சங்​களில் பணியாற்​றும் அலு​வலர்​களின் கருத்​துகளைக் கேட்​டனர். பணி​களை துரிதப்​படுத்​தி, விரை​வில் பயன்​பாட்​டுக்​குக் கொண்​டுவர ஒப்​பந்​த​தா​ரர்​களுக்கு அறி​வுறுத்​தி​னார்.

மேற்​கண்ட 4 ரயில் நிலை​யங்​களை​யும் அடுத்த 5 மாதங்​களில் பயன்​பாட்​டுக்​குக் கொண்​டுவர தெற்கு ரயில்வே திட்​ட​மிட்​டுள்​ளது. இந்த ரயில் நிலை​யங்​களில் பயணி​கள் காத்​திருப்பு அறை, நகரும் படிக்​கட்​டு​கள், நடை மேம்​பாலம், உட்பட பல்​வேறு வசதி​கள் இடம்​பெறும்​ என்​று தெற்​கு ரயில்​வே அதி​காரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in