சென்னையில் பருவமழை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு தலைமைச் செயலர் அறிவுறுத்தல்

சென்னையில் பருவமழை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு தலைமைச் செயலர் அறிவுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: வடகிழக்கு பரு​வ​மழையையொட்​டி, சென்​னை​யில் 4 துறை​கள் சார்​பில் மேற்​கொள்​ளப்​பட்டு வரும் பணி​களை ஆய்வு செய்​து, அவற்றை விரைந்து முடிக்​கு​மாறு அதி​காரி​களுக்கு தலை​மைச் செயலர் நா.​முரு​கானந்​தம் அறி​வுறுத்​தி​னார்.

வடகிழக்குப் பரு​வ​மழையை முன்​னிட்​டு, சோழிங்​கநல்​லூர் வட்​டம், பள்​ளிக்​கரணை சதுப்பு நிலத்​தைச் சுற்​றி​யுள்ள பகு​தி​களில் நீர்​வளத்​துறை சார்​பில் வெள்​ளத்தை தணிப்​ப​தற்​காக தெற்கு பக்​கிங்​ஹாம் கால்​வாயி​லிருந்து கடல் வரை நேரடி​யாக ரூ.91 கோடி மதிப்​பீட்​டில் மேற்​கொள்​ளப்​பட்டு வரும் பெரு​மூடிய கால்​வாய் அமைக்​கும் பணி நடை​பெற்று வரு​கிறது.

இதேபோல், ஒக்​கி​யம் மடு​வில் ரூ.27 கோடி மதிப்​பீட்​டில் விரி​வான மறுசீரமைப்பு மற்​றும் புதுப்​பித்​தல் பணி​கள், பள்​ளிக்​கரணை அணை ஏரியி​லிருந்து பள்​ளிக்​கரணை சதுப்பு நிலம் வரை ரூ.57.70 கோடி மதிப்​பீட்​டில் மூடிய பெரு​வடி​கால்​கள் அமைத்​தல் உள்ளிட்ட பணி​களை தலை​மைச் செயலர் நேற்று முன்​தினம் நேரில் ஆய்வு செய்​தார்.

கும்​மிடிப்​பூண்டி தோப்பு சாலை​யில் நெடுஞ்​சாலைத் துறை சார்​பில் ரூ.145 கோடி மதிப்​பீட்​டில் கட்​டப்​பட்டு வரும் உயர்​மட்ட பாலம்கட்​டும் பணி​யை​யும் அவர் பார்​வை​யிட்டு ஆய்வு மேற்​கொண்​டார். இப்​பணி​களை உரிய தொழில்​நுட்ப வழி​காட்​டு​தலுடன் போக்​கு​வரத்​துக்​கும் மக்​களுக்​கும் இடையூறின்றி பாது​காப்​பான முறை​யில் மேற்​கொள்​ள​வும், உரிய காலத்​தில் பணி​களை முடிப்​ப​தற்​கான நடவடிக்​கைகளை மேற்​கொள்​ள​வும் அலு​வலர்​களை அவர் அறி​வுறுத்​தி​னார்.

இதேபோல், அடை​யாறு கிரீன்​வேஸ் சாலை​யில் சென்னை குடிநீர் வாரி​யத்​தின் கழி​வுநீர் சுத்​தி​கரிப்பு நிலை​யத்தை தலை​மைச் செயலர் பார்​வை​யிட்டு ஆய்வு செய்​தார். மாநக​ராட்சி சார்​பில் சோழிங்​கநல்​லூர் மண்​டலத்​தில் உள்ள 42 ஏக்​கர் பரப்​பளவி​லான ராமன் தாங்​கல் ஏரி​யில் ரூ.1.26 கோடி மதிப்​பீட்​டில் மேற்​கொள்​ளப்​பட்டு வரும் புனரமைக்​கும் பணி​யை​யும் தலை​மைச் செயலர் பார்​வை​யிட்டு ஆய்வு செய்​தார்.

இதில் ஆகா​யத்​தாமரை அகற்​று​தல், பறவை​களுக்​கான தீவு​கள் அமைத்​தல், 10,500 மரங்​கள் நடு​தல், சூரிய சக்​தி​யில் இயங்​கும் நீரூற்​று, நடை​பாதை, மின்​விளக்கு வசதி, சுற்​றி​லும் வேலி அமைத்​தல் உள்​ளிட்ட பல்​வேறு பணி​கள் மேற்​கொள்​ளப்​படு​கின்றன. பின்​னர், அடை​யாறு மண்​டலம், கிண்டி ரேஸ் கோர்ஸ் கிளப் வளாகத்​தில் பெருநகர சென்னை மாநக​ராட்​சி​யின் சார்​பில் புதி​தாக அமைக்​கப்​பட்​டுள்ள 4 குளங்​களின் கொள்​ளளவை அதி​கரிக்​கும் வகை​யில் மேற்​கொள்​ளப்​பட்டு வரும் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்​தார்.

ஆய்​வு​களின்​போது, நெடுஞ்​சாலைத் துறைச் செயலர் ஆர்​.செல்​வ​ராஜ், நீர்​வளத் ​துறை செயலர் ஜெய​காந்​தன், தமிழ்​நாடு சாலை மேம்​பாட்டு நிறுவன மேலாண் இயக்​குநர் பாஸ்கர பாண்​டியன், சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்​கநர்​ டி.ஜி.வினய்​ உள்ளிட்​டோர்​ உடன் இருந்​தனர்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in