

மதுரை: தமிழகத்தில் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகள், அமைப்புகளின் கொடிக்கம்பங்களை அகற்றுவது தொடர்பான வழக்கில் இணைய விரும்பும் கட்சிகள் ஆக. 5-க்குள் இடையீட்டு மனு தாக்கல் செய்யலாம் என மதுரை உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.
இதையடுத்து, இந்திய கம்யூனிஸ்ட், தவெக, விசிக சார்பில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து, அதிமுக, மதிமுக சார்பிலும் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அதிமுக சார்பில் சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் மற்றும் மதிமுக சார்பில் பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் இடையீட்டு மனுக்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீது இன்று விசாரணை நடைடெற உள்ளது.