ஓடிபி பெற்று திமுக நடத்திய உறுப்பினர் சேர்க்கைக்கு விதித்த தடையை நீக்கக் கோரிய மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

ஓடிபி பெற்று திமுக நடத்திய உறுப்பினர் சேர்க்கைக்கு விதித்த தடையை நீக்கக் கோரிய மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
Updated on
1 min read

புதுடெல்லி: ஓடிபி எண்​ணைப் பயன்​படுத்தி ஓரணி​யில் தமிழ்​நாடு உறுப்​பினர் சேர்க்​கைக்கு உயர் நீதி​மன்ற மதுரை கிளை விதித்த தடையை நீக்​கக்​கோரி திமுக தரப்​பில் தாக்​கல் செய்​யப்​பட்ட மேல்​முறை​யீட்டு மனுவை உச்ச நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்துள்​ளது.

தமிழகம் முழு​வதும் திமுக​வினர் நடத்​தும் ‘ஓரணி​யில் தமிழ்​நாடு’ என்ற உறுப்​பினர் சேர்க்கை முகாமின்​போது பொதுமக்களிடமிருந்து ஆதார் உள்​ளிட்ட விவரங்​கள் மூல​மாக ‘ஓடிபி’ எண்​ணைப் பெறக்​கூ​டாது என உயர் நீதி​மன்ற மதுரை கிளை இடைக்​காலத்​தடை விதித்து உத்​தர​விட்​டிருந்​தது.

இதை எதிர்த்து திமுக வழக்​கறிஞர் அனு​ராதா அற்​புதம் உச்ச நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மேல்​முறை​யீட்டு மனு: ஓரணியில் தமிழ்​நாடு உறுப்​பினர் சேர்க்கை முகாமின்​போது உண்​மைத்​தன்​மையை உறுதி செய்​யவே ஓடிபி பெறப்​படு்கிறது. பிர​தான எதிர்க்​கட்​சி​யான அதி​முக நடை​பெறவுள்ள சட்​டப்​பேர​வைத் தேர்​தலை மனதில் கொண்டு பொது​மக்​களுக்கு திமுக தொல்லை அளித்து வரு​வ​தாகக்​கூறி இது​போன்ற தடைகளை ஏற்​படுத்தி வரு​கிறது.

திமுக​வில் சேர விருப்​பம் தெரிவிக்​கும் நபர்​களிடம் மட்​டுமே ஓடிபி எண் பெறப்​பட்டு விவரங்​கள் உறுதி செய்​யப்​படு​கின்​றன. இவற்றை கருத்​தில் கொள்​ளாமல் உயர் நீதி​மன்ற மதுரை கிளை​யும் இடைக்​காலத் தடை விதித்​துள்​ளது. ஓரணி​யில் தமிழ்​நாடு மூல​மாக உறுப்​பினர் சேர்க்கை என்​பது அது​வும் ஒரு​வகை​யில் வாக்​காளர் சேர்க்​கைக்​கான விழிப்​புணர்வு நடவடிக்​கையே.

கடந்த ஒரு​மாத​மாக நடத்​தப்​பட்ட உறுப்​பினர் சேர்க்கை முகாம் மூல​மாக இது​வரை 1.7 கோடி பேர் திமுக​வில் உறுப்​பினர்​களாக சேர்க்​கப்​பட்​டுள்​ளனர். தற்​போது உயர் நீதி​மன்​றத்​தின் ஓடிபி தடை உத்​தர​வால் திமுக​வின் உறுப்​பினர் சேர்க்​கை​யில் பாதிப்பு ஏற்​பட்​டுள்​ளது. எனவே இந்த தடையை நீக்க வேண்​டும். இவ்​வாறு கோரி​யிருந்​தார்.இந்த மனு உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் பி.எஸ். நரசிம்​மா, ஏ.எஸ்​.சந்​துகர் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது திமுக சார்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் பி.​வில்​சன், பாஜக, ஆம் ஆத்மி போன்ற கட்​சிகளைப் போலவே திமுக​வும் தமிழகம் முழு​வதும் ஓரணி​யில் தமிழ்​நாடு உறுப்​பினர் சேர்க்கை முகாம்​களை நடத்தி வரு​கிறது. ஆதார் எண்​களைப் கேட்டு பெற​வில்​லை. அரசி​யல் உள்​நோக்​கத்​துடன் தாக்​கல் செய்​யப்​பட்ட மனு​வில் கோரப்​ப​டாத தடையை உயர் நீதி​மன்​றம் பிறப்​பித்​துள்​ளது என்​றார்.

இதுதொடர்​பாக உயர் நீதி​மன்ற மதுரை கிளை​யில் வழக்கு தொடர்ந்த ராஜ்கு​மார் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் பாலாஜி சீனிவாசன், இந்த வழக்கு உயர் நீதி​மன்ற மதுரை கிளை​யில் ஆக.5 அன்று மீண்​டும் விசா​ரணைக்கு வரவுள்​ளது என்​றார். அதையடுத்து நீதிப​தி​கள், தற்​போதைய நிலை​யில் இந்த விவ​காரத்​தில் தலை​யிடு​வது பொருத்​த​மாக இருக்​காது என்​ப​தால் இடைக்​காலத் தடையை நீக்க முடி​யாது எனக்​கூறி தி​முக​வின் மேல்​முறை​யீட்டு மனுவை தள்​ளு​படி செய்​துள்​ளனர். மேலும். இதுதொடர்​பாக உயர்​ நீதி​மன்​ற மதுரை கிளை​யை நாட​வும்​ அறி​வுறுத்​தியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in