மதிமுகவின் போராட்டங்களை மக்கள் மன்றத்தில் முன்வைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்: வைகோ

மதிமுகவின் போராட்டங்களை மக்கள் மன்றத்தில் முன்வைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்: வைகோ
Updated on
1 min read

சென்னை: ம​தி​முக​வின் போ​ராட்​டங்​களை மக்​கள் மன்​றத்​தில் முன்​வைக்க வேண்​டியது காலத்​தின் கட்​டா​யம் என அக்​கட்சியின் பொதுச்​செய​லா​ளர் வைகோ தெரி​வித்​துள்​ளார்.

இது தொடர்​பாக அவர் தொண்​டர்​களுக்கு எழு​திய கடிதத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: மாநிலங்​களவை உறுப்​பினர் பதவி காலம் முடிந்த மறு​நாளே, தமிழகத்​தின் வாழ்​வா​தா​ரங்​களை காக்​கும் வகை​யில் நான் பங்​கேற்று உரை நிகழ்த்​தும் 8 பொதுக்​கூட்​டங்​கள் நடை​பெறும் என அறி​விப்பை வெளி​யிட்​டேன்.

ஆக.9-ம் தேதி முதல் நாள் கூட்​டம் தூத்​துக்​குடி​யில் ஸ்டெர்​லைட் வெளி​யேற்​றம் என்ற தலைப்​பில் நடை​பெறுகிறது. தூத்​துக்​குடியை பாழ்​படுத்​திய ஸ்டெர்​லைட் நச்சு ஆலைக்கு தடை விதித்த தீர்ப்​பு, மக்​கள் மன்​றத்​தி​லும் நீதி​மன்​றத்​தி​லும் அயர்​வும், சலிப்​பும் இன்றி மதி​முக போ​ராடியதற்​கு கிடைத்​துள்ள வரலாற்​று சிறப்​புமிக்க வெற்​றி​யாகும். இதையெல்​லாம் யாரும் திரைபோட்டு மறைக்க முடி​யாது. போ​ராட்​டக் களத்தை யாரும் உரிமை கோர​வும் முடி​யாது.

ஸ்டெர்​லைட் ஆலையை மூடு​வதற்கு மக்​கள் சக்​தியை திரட்​டி, இடையறாது போ​ராடி​யிருக்​கிறோம். இவற்றை மக்​கள் மன்​றத்​தில் முன்​வைக்க வேண்​டியது காலத்​தின் கட்​டா​யம். இதேபோல், 8 இடங்​களில் நடக்​க​விருக்​கும் பொதுக்​கூட்​டங்​களை வெற்​றிகர​மாக திட்​ட​மிட்டு உரிய ஏற்​பாடு​களை மாவட்​டச் செய​லா​ளர்​கள் உள்​ளிட்​டோர் செய்ய வேண்​டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in